டில்லி

டந்த 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் ஆட்சியில் 61 அரசாணைகள் பிறப்பிக்கபட்டுள்ள நிலையில் 2014 முதல் பாஜக ஆட்சியில் 76 அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

ஒரு அரசாணை மசோதாவாக மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு அங்கு ஒப்புதல் பெற்ற பிறகு மாநிலங்களவையில் ஒப்புதலுக்கு அனுப்பப்படுகிறது.  அங்கும் ஒப்புதலைப் பெற்ற பிறகு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படுகிறது.  குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெற்ற பிறகு மத்திய அமைச்சரவையின் மூலம் அது சட்டமாக்கப்பட்டு முந்தைய சட்டத்தை மாற்றி அமைக்கிறது.

கடந்த 2014 ஆம் வருடம் மே மாதம் முதல் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்துள்ளது.   அதற்கு முன்பு காங்கிரஸ் கூட்டணி ஆட்சி 2004 மே முதல் 2014 மே மாதம் வரையிலான 10 ஆண்டுகள் ஆட்சி செய்து நடந்தது.  இந்த இரு ஆட்சிகளிலும் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகள் குறித்த தகவல்கள் பி ஆர் எஸ் நாடாளுமன்ற ஆய்வு மற்றும் மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது.

இந்த தகவல்கள் மூலம் சென்ற காங்கிரஸ் ஆட்சியில் முழு பத்தாண்டு காலத்தில் 61  அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.  அத்துடன் பாஜகவின் 7 ஆண்டு ஆட்சியில் 76 அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.   பாஜகவின் முக்கிய அரசாணையான 3 வேளாண் சட்டங்களுக்குத் தொடர்ந்து எதிர்ப்பு நிலவி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.