சென்னை:
மிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் குறைக்கும் நோக்கில் நேற்று முதல் பல கட்டுப்பாடுகள் கொண்ட ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இந்நிலையில் தற்போது பல்வேறு தளர்வுகளை அறிவித்திருக்கிறது தமிழக அரசு.

அதன்படி, ‘காய்கறி, மலர்கள் ஆகியவற்றை விற்பனை செய்ய அளிக்கப்பட்ட அனுமதியைப் போன்று, அதே நிபந்தனைகளுடன் பழ வியாபாரமும் மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்படுகிறது.

ஆங்கில மருந்துக் கடைகள் இயங்க அளிக்கப்பட்ட அனுமதியைப் போன்று அதே நிபந்தனைகளுடன் நாட்டு மருந்துக் கடைகளும் இயங்கலாம் என்று அறிவிக்கப்படுகிறது.

அனைத்துத் தொழில் நிறுவனங்கள் ஊரடங்கு காலத்தில் தொழிற்சாலைகளில் பறி பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு ஒரு நாள் மட்டும் குறைந்த அளவிலான பணியாளர்களுடன் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது’ என்று தளர்வுகள் குறித்த விவரங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

தனியார் மற்றும் ஐடி நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்று தெரிகிறது. அதேபோல மதியம் 12 மணிக்கு மேல் அனுமதிக்கப்பட்ட கடைகள் செயல்படவும் தடைகள் தொடரும் எனத் தெரிகிறது.