ஆயுஷ்மான் காப்பிடு திட்டத்தில் 10 கோடி பேர் இணைப்பு : அமைச்சர்

--

நாகர்கோவில்

த்திய அரசின் ஆயுஷ்மான் மருத்துவ காப்பிடு திட்ட்த்தில் 10 கோடி பேர் இணைந்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பெண்கள் கிறித்துவக் கல்லூரியில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு பேரணி நடந்தது.   இந்த விழாவை மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணை அமைச்சரான பொன் ராதாகிருஷ்ணன் தொடங்கி வித்தார்.   இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், கூடுதல் ஆட்சியர்  ராகுல் நாத், நாகர்கோவில் நகராட்சி ஆணையர் சரவணகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார்.

தனது உரையில் பொன் ராதாகிருஷ்ணன், “நாடு முழுவதும் தூய்மை இந்தியா திட்டம் சிறப்பாக செயல் படுத்தப்படுகிறது.   மகாத்மா காந்தியின் கனவை பிரதமர் மோடி நனவாக்கி உள்ளார்.   பாஜகவின் 4 ஆண்டு ஆட்சியில் 8,64,00,000 கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.  ஆனால் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் வெறும் 4 கோடி கழிப்பறைகள் மட்டுமே கட்டப்பட்டிருந்தன.    இந்த தூய்மை இந்தியா திட்டம் மேலும் சிறப்பாக செயல்படுத்தப் படும்.

பொதுமக்கள் நலனுக்காக மத்திய அரசு ஆயுஷ்மான் என்னும் மருத்துவக் காப்பீடு திட்டத்தை  அறிமுகம் செய்துள்ளது.  இதில் நாடு முழுவதும் சுமார் 10 கோடிக்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர்.  இந்த திட்டத்தின் மூலம் சுமார் 50 கோடிக்கும் அதிகமானோர் பயனடைவார்கள்” என தெரிவித்துள்ளார்.