ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்பு

விஜயவாடா

ந்திர மாநிலத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,093 ஆகி மொத்தம் 1,20,390 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்து வருகிறது.

இன்று ஒரே நாளில் 10,093 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை 1,20,390 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று 65 பேர் மரணம் அடைந்து மொத்தம் 1213 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 2784 பேர் குணம் அடைந்து மொத்தம் 55,406 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 63,771 பேர் சிகிச்சையில் உள்ளனர்

இன்று கிழக்கு கோதாவரியில் அதிக அளவில் அதாவது 1676 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 17739 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.