அலகாபாத்,

குஜராத் மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த அனைவருக்கும் ஆதார் கார்ட்டில் ஒரே பிறந்தநாள் தேதி பிரிண்ட் செய்யப்பட்டுள்ளது.

இந்த மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆதார் கார்டு கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. அனைத்து வகையான பரிவர்த்தனைக்கும் ஆதார் கார்டு தேவைப்படுகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் ஆதார் கார்டு வழங்கும் பணிகள் முழுமூச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அலகாபாத் அருகே உள்ள கஞ்சஸா என்ற கிராமத்தில் உள்ள அனைவருக்கும் தற்போது ஆதார் கார்டு வழங்கப்பட்டுள்ளது.  அந்த கார்டில் கிராமத்தினர் அனைவருக்கும் பிறந்த தேதி ஜனவரி 1 என்று அச்சிடப்பட்டுள்ளது.

அந்த கிராமத்தை சேர்ந்த 10ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கும்  பிறந்த தேதி ஜனவரி 1 என்று ஆதார் கார்டில் பிரிண்ட் செய்யப்பட்டுள்ளது. இது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த தவறு, அந்த பகுதி ஆசிரியர்கள் கிராமத்திற்குள் சென்று பள்ளிக்கு மாணவர்களை சேர்க்க சென்றபோது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து அந்த கிராமத்தின் தலைவர் ராம்துரை கூறியதாவது, இந்த தவறு குறித்து அதிகாரி களுக்கு தெரியப்படுத்தி உள்ளதாகவும், விரைவில் தவறு சரி செய்யப்பட்டு அனைவருக்கும் புதிய கார்டு விரைவில் வழங்கப்பட இருப்பதாகவும் கூறி உள்ளார்.