புழல் சிறையிலிருந்து இன்று மேலும் 17 ஆயுள் தண்டனை கைதிகள் விடுவிப்பு

சென்னை:

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, சென்னை புழல் சிறையில் இருந்து இன்று மேலும் 17 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி 10 ஆண்டுகள் தண்டனையை நிறைவு செய்த ஆயுள் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. 1,700-க்கும் மேற்பட்ட கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன்படி முதல்கட்டமாக கடந்த ஜூன் மாதம்  6ந்தேதி, முதல்கட்டமாக  67 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இதுவரை 6 கட்டமாக  புழல் மத்திய சிறையில் இருந்து 12 பெண்கள் உட்பட 193 ஆயுள் தண்டனை கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

இன்று 7வது கட்டமாக 17 ஆயுள் தண்டனை கைதிகள் புழல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட னர். இதன் காரணமாக  மொத்தம் 210 ஆயுள் தண்டனை கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளளனர்.