டில்லி

ந்தியாவில் மருத்துவ சிகிச்சை பெற கடந்த 2016ஆம் வருடம் 2 லட்சம் பேர் வந்துள்ளனர் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கு மருத்துவ சிகிச்சை பெற வெளிநாட்டவர் விரும்பி வருகின்றனர்.  இந்தியாவில் மற்ற உலக நாடுகளை விட தரமான மருத்துவ சிகிச்சை கிடைப்பதே இதற்கு முக்கிய காரணம் ஆகும்.  மேலை நாடுகளை விட இங்கு மருத்துவச் செலவு குறைவாகவும் உள்ளது.   இதனால் கடந்த 2016ஆம் ஆண்டில் மருத்துவத் துறையின் மூலம் இந்தியாவுக்கு ரூ.19,266 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.

இந்தியாவுக்கு கடந்த 2016ஆம் வருடம் மட்டும் சுமார் 2.01,999 பேருக்கு இந்திய அரசு மருத்துவ விசா அளித்துள்ளது.   இதில் வங்கதேசத்தவர், (99,799) ஆப்கானிஸ்தான் (33955),  ஈராக் (13465) ஓமன் (12,227 பேர்), உஸ்பெகிஸ்தான் (4,420 பேர்), நைஜீரியா (4,369 பேர்). பாகிஸ்தான் (1,678) பேர் மருத்துவ சிகிச்சை பெற இந்தியா வந்துள்ளனர்.   இது தவிர அமெரிக்கா (296 பேர்), பிரிட்டன் (370 பேர்), ரஷியா (96 பேர்), ஆஸ்திரேலியா (75 பேர்) என மேலை  நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்து மருத்துவ சிகிச்சை பெற்றுச் சென்றுள்ளனர்.

மேற் கூறிய தகவல்களை மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.