ஒரே ஆண்டில் புகையிலைக்கு 20 லட்சம் இந்தியர்கள் ‘குட்பை’

--

டில்லி:

மத்திய அரசின் நடவடிக்கையால் முதல் ஆண்டிலேயே நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் 20 லட்சம் பேர் புகையிலை பயன்பாட்டில் இருந்து விலகியுள்ளனர் என்று உலக சுக £தார மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கப்பட்டது.

முதலாமாண்டு நிறைவின் போது பதிவு செய்யப்பட்ட 12 ஆயிரம் பேரிடம் மாற்றம் இரு ந்ததை சுகாதார துறை உறுதி செய்துள்ளது. இதன் மூலம் சராசரியாக 7 சதவீத புகையிலை, அதாவது சிகரெட் மற்றும் சிகரெட் அல்லாத புகையிலை பயன்டுத்தியவர்களிடம் இந்த ம £ற்றம் ஏற்பட்டுள்ளது.

மொபைல் போன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த பிரச்சாரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் மூலம் புகையிலை விழிப்புணர்வு குறித்து குறுஞ் செய்திகளாக அனுப்பப்பட்டது. திட்டம் தொடங்கப்பட்ட முதல் ஆண்டிலேயே 20 லட்சம் புகையிலை பயன்படுத்துவோர் இதில் இணைந்துள்ளனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து தானியங்கி குரல் தொழில்நுட்பம் (ஐவிஆர்எஸ்) மூலம் பிரச்ச £ரம் மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கூடுதலாக 5 மொழிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.