நொய்டா

த்திரப்பிரதேச அரசு பசு காப்பகத்தில் 200க்கும் மேற்பட்ட பசுக்கள் மரணம் அடைந்துள்ளன.

உத்திரப் பிரதேச மாநிலத்தில் பசுக்களை கொல்ல அரசு தடை விதித்துள்ளது. ஆகவே கவனிக்க இயலாத பசுக்களை அவற்றின் உரிமையாளர்கள் ஆதரவற்ற நிலையில் தெருக்களில் அலைய விட்டு விடுகின்றனர். இதனால் அந்த பசுக்கள் பல விளை நிலங்களில் மேய்ந்து பயிரை அழித்து விடுகின்றன. மாநிலத்தில் ஒரு சில இடங்களில் இவ்வாறு பசுக்களை அடைத்து வைக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளன.

அதை ஒட்டி உத்திரப் பிரதேச மாநில அரசு பல பசு காப்பககங்களை அமைத்தது. ஆதரவற்று திரியும் பசுக்கள் அங்கு கொண்டு வந்து விடப்பட்டன. இவ்வாறு ஒரே இடத்தில் ஏராளமான பசுக்கள் இருந்து வருகின்றன. இதனால் பசுக்களை சரிவர பராமரிக்க முடியாத நிலை உள்ளது. இந்த பசுக்களுக்கு இதனால் நோய்த் தொற்று மற்றும் சரியான உணவு கிடைக்காத நிலை ஆகியவை உண்டாகி உள்ளது.

உத்திரப் பிரதேச மாநிலம் நொய்டா நகரில் அமைந்துள்ள அரசு பசு காப்பகத்தில் ஏராளமான பசுக்கள் அடைக்கப்பட்டிருந்தன. கடந்த இரு மாதங்களில் இந்த காப்பகத்தில் இருந்த பசுக்களில் 200க்கும் மேற்பட்டவை மரணம் அடைந்துள்ளன.  இது அந்த பகுதியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த காப்பக மேலாளர் இது குறித்த காரனம் தெரியவில்லை எனவும் விரைவில் ஆய்வு நடத்தி கண்டறிப்யபடும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் இங்கு அளவுக்கு அதிகமான பசுக்கள் அடைக்கப்பட்டிருந்ததால் அவைகளுக்கிடையே ஏற்பட்ட நோய் தொற்று, மற்றும் சரியான உணவு இல்லாததால் ஏற்பட்ட ஊட்டச் சத்துக் குறைவு ஆகியவையே இந்த மரணத்துக்கு காரணம் என சொல்லப்படுகிறது. பசுக்களின் பாதுகாவலர் என தன்னை சொல்லிக் கொள்ளும் பாஜக தலைவர் யோகி ஆதித்ய நாத் ஆட்சியில் இவ்வாறு பசுக்கள் மரணமடைவது குறித்து பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.