நியூ ஜெர்சி : 3000 க்கும் மேற்பட்டோருக்கு எச் ஐ வி மற்றும் ஹெபாடிடிஸ் பாதிப்பு

சாடில் ப்ரூக், நியூ ஜெர்சி

மெரிக்காவின் நியு ஜெர்சி மாகாணத்தில் சாடில் ப்ரூக் நகரில் உள்ள ஒரு மருத்துவ மையத்தில் 3000 க்கும் மேற்பட்டோர் எச் ஐ வி மற்றும் ஹெபாடிடிஸ் ஆல் பாதிக்கப்பட்டுள்ளதை கண்டறிந்துளனர்.

அமெரிக்காவில் உள்ள நியு ஜெர்சி மாகாணத்தில் பல மருத்துவமனைகள் உள்ளன. அங்கு ஏராளமான நோயாளிஅள் அறுவை சிகிச்சை செய்துக் கொள்ள வருகின்றனர். இந்த மாகாணத்தில் உள்ள சாடில் ப்ரூக் நகரில் ஹெல்த் பிளஸ் சர்ஜிகல் செண்டர் என்னும் அறுவை சிகிச்சை மையம் ஒன்று உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கானோருக்கு அறுவை சிகிசை நாந்துள்ளது.

இங்குள்ள நோயாளிகளுக்கு இரத்த பரிசோதனை நடத்தப்பட்டுளது. அப்போது கடந்த ஜனவரி மாதம் 1 ஆம் தேதி முதல் செப்டம்பர் 7 வரையில் சுமார் 3000 க்கும் மேற்பட்டோர் எச் ஐ வி மற்றும் ஹெபாடிடிஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியது. இந்த மருத்துவ மையத்தில் சரியான முறையில் சுத்ஹ்தம் செய்யப்படாத இஞ்ஜக்‌ஷன் சிரிஞ்சுகளே இதற்கு காரணம் என தெரிய வந்துள்ளது.

இந்த மருத்துவ மைய அதிகாரி தங்கள் நோயாளிகளுக்கு எவ்வித தொற்றும் அல்லது உடல்நலக் குறைவும் உண்டாகவில்லை என அறிவித்துள்ளார். ஆயினும் சுகாதார அதிகாரிகள் இங்குள்ள நோயாளிகளை இந்த மையத்தில் இருந்து வெளியேறி வேறு இடங்களில் பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் செய்துள்ளனர். இதுவரை 3717 நோயாளிகள் இவ்வாறு பரிசோதிக்கப்பட்டு பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.