Random image

உயிருக்கு ஆபத்தான ஜான்சன் & ஜான்சன் பொருட்கள்: இந்தியாவை சேர்ந்த 40 பேருக்கு இடுப்பு எலும்பு பாதிப்பு

ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் பொருட்களை பயன்படுத்தி வந்ததால் இந்தியாவை சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர் இடுப்பு எலும்பு பிரச்சனையால் பாதிக்கப்பட்டதாக பொது சுகாதார நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஏற்கெனவே ஜான்சன் & ஜான்சன் பொருட்களால் கர்ப்பப்பை புற்றுநோய் வருவதாக அந்நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.

johnson

பொது சுகாதார நிறுவனங்கள் சமூக ஊடகங்கள் மூலமும், உதவி எண்கள் மூலமும், விழிப்புணர்வு பிரச்சாரம் மூலம் மக்கள் உபயோகிக்கும் பொருட்களின் தரம் குறித்து ஆராய்ந்து வருகிறது. இதில் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் பொருட்களை பயன்படுத்தும் இந்தியாவை சேர்ந்த 40 பேருக்கு இடுப்பு எலும்பு செயலிழப்பு, வலி மற்றும் மாற்று அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை குறித்த கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற சென்னையை சேர்ந்த சுவாமிநாதன், தான் ஜான்சன் & ஜான்சன் பொருட்களை தொடர்ந்து உபயோகித்து வந்ததால் பாதிக்கப்பட்டதாக குறிப்பிட்டார். தொடர்ந்து இடுப்பு வலியால் அவதிப்பட்ட அவர் 2007ம் ஆண்டு இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துக் கொண்டதாகவும், முதன் முதலில் இதற்கான காரணம் குறித்து அவரது மருத்துவர் ஆராய்ந்ததில் அவர் பயன்படுத்தி வந்த பொருளினால் இடுப்பு எலும்பு பாதிக்கப்பட்டுள்ளது என தெரிய வந்ததாகவும் கூறினார். மேலும், 2009 ம் ஆண்டும் மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்துக் கொண்டதாக சுவாமிநாதன் கூறினார்.

இருப்பினும், இதுவரை பொது சுகாதாரத்துறை நிறுவனங்களால் ஆய்வு நடத்தியதில் இந்தியாவில் மட்டும் 4,700 பேர் ஜான்சன் & ஜான்சன் பொருட்களை பயன்படுத்தி வந்ததால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3,600பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் இந்த 40 பேரும் அடங்குவர் என சுகாதாரத்துறை நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுவரை எனக்கு அந்நிறுவனம் எந்தவித உதவிகளையும், இழப்பீடுகளையும் அளிக்கவில்லை என்றும், மாறாக இந்திய மருத்துவ நடவடிக்கை குழு இது குறித்து முழு விவரங்களையும் அளித்து வருவதாக சுவாமிநாதன் குறிப்பிட்டுள்ளார்.