கொரோனா வைரசை தடுக்க 40 தடுப்பூசிகள் பரிசோதனையில் உள்ளன: ஐசிஎம்ஆர் தகவல்

டெல்லி: 40க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் பரிசோதனைகள் உள்ளன, இன்னும் தடுப்பூசிகள் கண்டறியப்படவில்லை என்று ஐசிஎம்ஆர் கூறி இருக்கிறது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் முடக்கத்தை மத்திய அரசு கடந்த மாதம் 25ம் தேதி அமல்படுத்தியது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் சற்றும் குறையவில்லை.

நாள்தோறும் அதன் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா முதலிடத்திலும், 2வது இடத்தில் தமிழகமும் உள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக ஐசிஎம்ஆர் அதிகாரி மனோஜ் முர்ஹேகர் டெல்லியில் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது: கொரோனாவுக்காக 40க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் பரிசோதனையில் இருக்கின்றன.

ஆனால் எதுவும் இன்னும் அடுத்த கட்டத்தை எட்டவில்லை. தற்போது வரை, தடுப்பூசி எதுவும் இல்லை என்று கூறினார்.