இந்த ஆண்டில் 42% அதிக குற்ற வழக்குகள் முடித்துவைப்பு: சட்டஅமைச்சர் சண்முகம்

சென்னை:

ந்த ஆண்டில் இதுவரை  42 சதவிதம் அளவில் அதிகமான குற்றவழக்குள் நீதிமன்றங்களால் விசாரித்து முடிக்கப்பட்டுள்ளது என்று தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் கூறி உள்ளார்.

சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு குற்ற வழக்கு தொடர்பு துறை சார்பில் அரசு வழக்கறிஞர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி துவக்க விழாவில்  தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது,  தற்போதைய (2018) ஆண்டில் குற்ற வழக்குகள் முடித்து வைப்பு 42% அதிகரித்துள்ளது என்று  கூறினார்.

மேலும் ஓரிரு ஆண்டுகளில் 100% நீதிமன்றங்கள் சொந்த கட்டடங்களில் இயங்கும் என்றும், மேலும்,  11 குற்றவியல் நீதிமன்றங்களை உருவாக்கவும், 51 சிறு குற்றங்களை விசாரிக்கும் நீதிமன்றங்களை உருவாக்கவும் முயற்சி நடைபெறுவதாகவும் தெரிவித்தார்.‘

இன்னும் ஓரிரு ஆண்டுகளில் 100% நீதிமன்றங்கள் சொந்த கட்டடங்களில் இயங்கும் என்றும் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.