திருச்சி அருகே பயங்கரம்: பேருந்து மோதி 50க்கும் மேற்பட்ட ஆடுகள் பலி

திருச்சி:

திருச்சி அருகே இன்று அதிகாலை பேருந்து மோதி 50க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியானது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி புதுக்கோட்டை சாலை வழியாக  இலுப்பூர் தாலுகா தென்னலூர்  பகுதியைச் சேர்ந்த துரைச்சாமி  என்பவர் தனக்கு சொந்தமான 300 செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்காக துவாக்குடி பகுதிக்கு ஓட்டிச் சென்றார்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த  அரசுப் பேருந்து மண்டையூர் முருகன் கோயில் அருகே  ஆட்டு மந்தைமீது வேகமாக மோதியது. இதில் பஸ்சுக்குள் சிக்கி சுமார் 50க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்தன. மேலும் பல ஆண்டுகள் காயம் அடைந்தன. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து மண்டையூர் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.