பெய்ஜிங் :
2019 ம் ஆண்டு டிசம்பர் மத்தியில் சீனாவின் வுஹான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், இதுவரை உலகம் முழுவதும் 46 லட்சம் பேரை பாதித்துள்ளது, சீனாவில் இதுவரை 83000 மட்டுமே பாதிப்புக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அமெரிக்காவிலோ இதுவரை உயிரிழப்பே 88000 தாண்டி விட்டது.
கொரோனா வைரஸ் பரவியதற்கு சீனாதான் காரணம் என்று ஏற்கனவே அமெரிக்கா குற்றம்சாட்டி வந்த நிலையில், சீனா இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு குறித்த உண்மையான தகவல்களை சீனா மூடி மறைப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது, இந்த நிலையில் சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகளின் மொத்த எண்ணிக்கை 640,000 என சீன தேசிய பாதுகாப்பு தொழில்நுட்ப பல்கலைக்கழக தரவுத்தளம் பதிவு செய்துள்ளது.
இதுவரை ரகசியமாக பாதுகாக்கப்பட்ட இந்த புள்ளிவிவரங்கள் தற்போது கசிந்துள்ள நிலையில் உலக நாடுகள் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளன. இருப்பினும் உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாக பலர் நம்புகிறார்கள்.