டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உச்சமடைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக தினசரி 90ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியான நிலையில், நேற்று மட்டும் 96 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பேருக்கு கொரோனா
மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 96,551-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல்,  1,209- பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 45 லட்சத்து 62 ஆயிரத்து 415- ஆக உள்ளது.
தொற்று பாதிப்புடன் 9 லட்சத்து 43 ஆயிரத்து 480-பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை , 35 லட்சத்து 42 ஆயிரம் பேர் தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பால் இந்தியாவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 76 ஆயிரத்து 271- பேர் உயிரிழந்துள்ளனர்.
 இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைவோர் விகிதம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 29 நாட்களில் குணமடைவோர் விகிதம் முந்தைய விகிதத்தை விட 100 சதவிகிதத்திற்கும் மேல் உயர்ந்துள்ள தாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்j நிலையில் இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 5.40 கோடியாக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றை கண்டறிவதற்காக நேற்று வரை 5,40,97,975 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும், நேற்று மட்டும் 11,63,542 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் ஐஎம்சிஆர் தெரிவித்துள்ளது.