சேலம் மாவட்டத்தில் இன்று மேலும் 94 பேருக்கு கொரோனா…

சேலம்:

சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்  இன்று மேலும் 94 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

நேற்று மாலை தமிழக சுகாதாத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  1409 ஆக உள்ளது. இதுவரை 576 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்த நிலையில், 827 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும்,  6 பேர் பலியாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று  94 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால்  மொத்த பாதிப்பு 1,503ஆக உயர்ந்துள்ளது.

கார்ட்டூன் கேலரி