செல்லாத ரூபாய் நோட்டுக்கள் எண்ணி முடிப்பு : 99% பணம் திரும்ப வந்துள்ளது

டில்லி

ணமதிப்புழப்பு சமயத்தில் டிபாசிட் செய்யப்பட்ட பணத்தை ரிசர்வ் வங்கி எண்ணி முடித்ததில் ரூ.10720 கோடி மதிப்பிலான நோட்டுக்கள் மட்டுமே திரும்ப வரவில்லை என தெரிய வந்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரதமர் மோடி ரூ. 500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தார்.   கருப்புப் பணத்தையும் கள்ள நோட்டுக்களையும் கண்டு பிடிக்க இவ்வாறு அறிவிக்கப்பட்டதாக அவர் அப்போது தெரிவித்தார்.  அந்த செல்லாத நோட்டுக்க்கள் வங்கியில் டிபாசிட் செய்யப்பட்டது.

அவ்வாறு டிபாசிட் செய்யப்பட்ட நோட்டுக்களை எண்ணும் பணி நிறைவு பெறவில்லை என ரிசர்வ் வங்கி தொடர்ந்து தெரிவித்து வந்தது பலரது ஆட்சேபணைக்கும் கிண்டலுக்கும் உள்ளானது.    தற்போது இந்த நோட்டுக்களை எண்ணும் பணி நிறைவுற்றதால் அந்த எண்ணிக்கை முடிவு குறித்து ரிசர்வ் வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த ரிசர்வ் வங்கியின் அறிக்கையின் படி பணமதிழப்பு நடவடிக்கையின் போது செல்லாது என அறிவிக்கப்பட்ட நோட்டுக்கள் ரூ. 15.4 லட்சம் கோடி அளவுக்கு புழக்கத்தில் இருந்தது.   அதில் ரூ.13.3 லட்சம் கோடிக்கு மேல் வங்கிகளுக்கு திரும்பி வந்து விட்டது.    அதாவது 99%க்கும் அதிகமாக வந்து விட்டது.

வங்கிக்கு வராத நோட்டுக்களின் மதிப்பு ரு.10,720 கோடி மட்டுமே என தற்போது தெரிய வந்துள்ளது.    அதாவது ஒரு சதவீதத்துக்கும் குறைவான பணம் மட்டுமே திரும்பி வராமல் இருந்துள்ளது. 

அதே நேரத்தில் புதிய நோட்டுக்கள் அச்சடிக்க ரூ.5000 கோடிக்கு மேல் செலவானதாக கூறப்படுவது பொதுமக்களிடையே அதிருப்தியை உண்டாக்கி இருக்கிறது.