டில்லி

ந்தியாவில் மொத்தமுள்ள 718 மாவட்டங்களில் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது

சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலகெங்கும் பரவி வருகிறது.  இதுவரை 17 லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு அடைந்து ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் மரணம் அடைந்துள்ளனர்.   இந்த வைரஸ் தொற்று கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது.   இதுவரை இந்தியாவில் சுமார் 8300க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த கொரோனா வைரஸ் தொற்று கடந்த மார்ச் மாதம் 29 ஆம் தேதியன்று 160 மாவட்டங்களில் காணப்பட்டது.  அது ஏப்ரல் ஆறாம் தேதி அன்று 284 மாவட்டங்கள் ஆக உயர்ந்தது.   தற்போது இந்தியாவில் உள்ள 718 மாவட்டங்களில் 364 மாவட்டங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக பார்க்கும் போது உத்தரப்பிரதேசத்தில் அதிக அளவில் 40 மாவட்டங்களில் கொரோனா தொற்று உள்ளது  அடுத்தபடியாக தமிழ்நாட்டில் 33 மாவட்டங்களில் கொரோனா உள்ளது.  எண்ணிக்கை அளவில் அதிகமாக உள்ள மகாராஷ்டிர மாநிலத்தில் 27 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.   தலைநகர்  டில்லி அமைந்துள்ள யூனியன் பிரதேசத்தில் 11 மாவட்டங்களில் பாதிப்பு உள்ளது.