ஸ்ரீநகர்

மர்நாத் கோவிலுக்குச் செல்ல இதுவரை ஒருலட்சம் பேருக்கு மேல்  முன்பதிவு செய்துள்ளனர்.

காஷ்மீர் மாநிலத்தின் தென் பகுதியில் இமயமலையில் அமைந்துள்ளது அமர்நாத் குகைக்கோயில்.  இந்தக் கோவிலில் வருடந்தோறும் ஜூன் மாதத்தில் பனி லிங்கம் ஒன்று இயற்கையாக உருவாகும்.   இந்த லிங்கத்தை தரிசிக்க நாடெங்கும் இருந்து பக்தர்கள் யாத்திரை மேற்கொள்வார்கள்.  இந்த யாத்திரை சுமார் 60 நாட்கள் நடைபெறும்.

இந்த வருடம் அமர்நாத் புனித யாத்திரை வரும் ஜுன் மாதம் 28ஆம் தேதி முதல் தொடங்கும் என அரசு அறிவித்துள்ளது.   இதற்கான முன்பதிவும் தொடங்கப்பட்டுள்ளது.  பஞ்சாப் நேஷனல் வங்கி, யெஸ் வங்கி, ஜம்மு காஷ்மீர் மாநில வங்கி ஆகிய வங்கிகலின் கிளைகளில் முன்பதிவு நடைபெற்று வருகிறது.  நாடு முழுவதிலும் இருந்து இதுவரை சுமார் ஒரு லட்சம் பேருக்கு மேல் முன்பதிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.