நாளை பாராளுமன்றத்தில் ரபேல் ஊழல் தொடர்பாக பிரதமர் மோடி தேர்வை எதிர்க்கொள்வார் என என டிவிட்டரில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார். அதற்கான கேள்விகளையும் அவர் வரிசைப்படுத்தி குறிப்பிட்டுள்ளார்.

ragul

புத்தாண்டு விடுமுறைக்கு பின்னர் இன்று பாராளுமன்றம் கூடியபோது ரபேல் போர் விமான ஊழல் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் காரசாரமாக விவாதித்தார். எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு அவைக்கு வந்து பதிலளிக்க மோடிக்கு தைரியம் இல்லை எனவும் ராகுல் காந்தி விம்ர்சித்தார்.

அதுமட்டுமின்றி, நொடிந்த நிலையில் உள்ள தனது நண்பர் அனில் அம்பானிக்கு உதவி செய்வதற்காக ரபேல் ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு பிரதமர் மோடி அளித்துவிட்டார் என ராகுல் காந்தி குற்றாம்சாட்டியுள்ளார். மேலும், 126 போர் விமானங்கள் தேவைப்படும்போது, ஏன் 36 விமானங்களுக்கு ஒப்பந்தம் போடப்பட்டது? அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை பரிந்துரைத்தது ஏன் ? உள்ளிட்ட பல கேள்விகளை அடுக்கடுக்கான பாராளுமன்றத்தில் ராகுல்காந்தி எழுப்பினார்.

மேலும், ரபேல் கொள்முதல் விவகாரம் தொடர்பான பல முக்கிய கோப்புகள் இன்னும் தனது வீட்டில் இருப்பதாக முன்னாள் ராணுவ அமைச்சரும், தற்போதைய கோவா முதல்வருமான மனோகர் பாரிக்கர் பேசிய ஆடியோ ஆதாரம் தன்னிடம் உள்ளதாக தெரிவித்த ராகுல், அந்த பேச்சை மக்களவையில் ஒலிபரப்ப அனுமதிக்க வேண்டும் என சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் அனுமதி கோரினார்.

இதற்கு நிதிஅமைச்சர் அருண்ஜெட்லி பதிலளித்து பேசினார். இதற்கிடையே அதிமுக எம்பிக்கள் மேகத்தாது அணை குறித்து கேள்வி எழுப்பி அமளில் ஈடுபட்டனர். இதனால் அவை நடவடிக்கை இன்று முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின்னர், பேசிய ராகுல்காந்தி பிரதமர் மோடியை பாதுகாக்கவே அதிமுக எம்பிக்கள் அமளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டினார்.

இந்நிலையில் நாளை பாராளுமன்ற கூட்டத்தில் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு தேர்வு நடைபெற உள்ளதாகவும், அதற்கான வினாக்கள் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். நாளை பாராளுமன்றத்தில் தான் கேட்க உள்ள கேள்விகளையும் அவர் வரிசைப்படுத்தியுள்ளார். அதில்,
1. 126 போர் விமானங்கள் தேவைப்படும் ஏன் 36 விமானங்கள் மட்டும் பெறப்பட்டன?

2.ஒரு விமானத்திற்கு 560 கோடி என ஏன் 1600 கோடி பெறப்பட்டன ?

3.போர் விமானங்கள் தயாரிக்கும் நிறுவனம்(HAL) இருக்கும் போது ஏன் வெளிநாட்டு நிறுவனம்(AA) தேவைப்பட்டது ?

இதற்கு உரிய விளக்கங்களை காண்பிப்பாரா அல்லது பதிலளிப்பாரா என கேள்வி எழுப்பி ராகுல் காந்தி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.