சென்னை: தமிழகத்தில்  வரும் 7ஆம் தேதி புதிதாக இரட்டை புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஏற்கனவே நிவர், புரெவி புயல் மழையால் தமிழகம் தத்தளித்துக்கொண்டிருக்கும் நிலையில், மேலும் இரண்டு புயல்கள் உருவாக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

வங்கக்கடலில் உருவான இந்த புரேவி புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நீண்ட நேரமாக நகர்வின்றி பாம்பன் பகுதியில் நிலவுகிறது. இந்த ழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்னும் 6 மணிநேரத்தில் பாம்பன் – தூத்துக்குடி இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புரேவி புயல் காரணமாக சென்னை தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் சென்னை, புதுச்சேரி அருகே மேலும் இரண்டு புயல்கள் உருவாக வாய்ப்புள்ளதாகவும், அது குறித்து டிசம்பர் 7 ஆம் தேதி தெரியவரும் என்றும் சென்னை வானிலை மையம் மிரட்டல் வித்துள்ளது.

ஆனால் இதுகுறித்து தற்போது உறுதியாக எதுவும் கூட முடியாது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனாலும் மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றும், இயற்கை பேரிடரை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.