அறிமுக டெஸ்ட்டிலேயே அதிக விக்கெட்டுகள் – அக்ஸார் படேல் சாதனை!

அறிமுக டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் இந்திய சுழல் நட்சத்திரம் அக்ஸார் படேல்.

குஜராத் சுழற்பந்து வீச்சாளர் அக்ஸார் படேல், இத்தொடரில் மொத்தமாக 27 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். ஆனால், அவர் 3 போட்டிகள் மட்டுமே விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் அவர் இடம்பெறவில்லை. இரண்டாவது டெஸ்ட்டில் அறிமுகமான அவர், அப்போட்டியில் 7 விக்கெட்டுகளையும், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 11 விக்கெட்டுகளையும், நான்காவது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார்.

இதற்கு முன்னர், இந்திய வீரர் திலீப் ஜோஷி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அறிமுக டெஸ்ட் தொடரில் 27 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அவர் அத்தொடரில் மொத்தம் 6 போட்டிகளில் ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில், அகஸார் படேலே சாதனையாளர்!