பெங்களூரு

இந்தியாவில் தொழில்நுட்பட்துறையில் அதிக அளவில் பெண்கள் பனி புரிவதாக தகவல்கள் வந்துள்ளன.

உலகம் எங்கும் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் பணி புரிந்து வருகின்றனர்.   விண்வெளியில் பறப்பதில் இருந்து வீட்டு வேலைகளை கவனிப்பது வரை அனைத்தையும் பெண்கள் சுலபமாக செய்கின்றனர்.  பிரிட்டனில் உள்ள ஒரு நிறுவனம் பெண்கள் பணிபுரியும் துறைகளைப் பற்றி ஒரு கணக்கெடுப்பு நடத்தியது.  அதன் முடிவு தற்போது வெளியாகி உள்ளது.

இந்த கணக்கெடுக்கில், ”உலகம் முழுவதும் எடுத்த கணக்கெடுப்பின் படி இந்தியாவில் தொழில்நுட்பத்துறையில் பெண்கள் அதிகம் பணி புரிகின்றனர்.  தொழில்நுட்பத்துறையில் பணி புரியும் பெண்கள் இந்தியாவில் 34% உள்ளனர். அதாவது இந்தியாவில் தொழில்நுட்பத்துறையில் பணிபுரியும் 39 லட்சம் ஊழியர்களில் 13 லட்சம் பேர் பெண்கள் ஆவார்கள்.  அடுத்தபடியாக அமெரிக்காவில் 30% உள்ளனர்.

இது குறித்து சமீபத்தில் ஒரு தனியார் நிறுவனம் பெங்களூருவில் நடத்திய கருத்தரங்கில் கலந்துக் கொண்ட பிரிட்டன் நிறுவனத்தின் பிரதிநிதி பிரெண்டா டார்டென் வில்கர்சன், “பெண்கள் கற்றுக் கொள்வதில், வேலையை முடிப்பதில் திறமைசாலிகளாக இருப்பினும் அவர்களால் உடன் பணிபுரியும் ஆண்களின் துணை அவசியம் தேவைப் படுகிறது.  அவர்கள் ஒத்துழைப்பு இல்லை எனில் பெண்களுக்கு இவைகள் சாத்தியமாவது இல்லை.” எனக் குறிப்பிட்டுள்ளார்.