4 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் எவ்வளவு?

சென்னை: தமிழகத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடந்துவரும் இடைத்தேர்தலில், காலை 11 மணி நிலவரப்படி பதிவான வாக்குகள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் தொகுதியில் பதிவான வாக்குகள் – 31.55%

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தொகுதியில் பதிவான வாக்குகள் – 30.28%

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் பதிவான வாக்குகள் – 34.89%

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியில் பதிவான வாக்குகள் – 30.02%

காலை 11 மணி நிலவரப்படியே அனைத்து தொகுதிகளிலும் 30% தாண்டிவிட்டதால், ஒட்டுமொத்தமாக வாக்கு சதவிகிதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.