morning-news
மோசடி புகாரில் ஆதாரம் இல்லை: முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வழக்கு ரத்து; மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
சிறையில் தற்கொலை செய்து கொண்ட ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்ய டாக்டர்கள் குழு அமைப்பு வீடியோ படம் எடுக்கவும் ஐகோர்ட்டு உத்தரவு
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தி.மு.க.வில் விருப்ப மனு தொடங்கியது; விண்ணப்பங்களை சமர்ப்பிக்க நாளை மறுதினம் கடைசி நாள்
சந்தேகப்படும் 6 இடங்களில் தீவிர ஆய்வு: ‘மாயமான விமானத்தை நெருங்கி விட்டோம்’; கடற்படை அதிகாரிகள் தகவல்
டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை இன்று திறப்பு; 16 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும்
மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு கட்சியினர் தி.மு.க.வில் இணைந்தனர்
அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் தொடர்பான வழக்கு: பள்ளிக்கல்வித்துறை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும்; ஐகோர்ட்டு உத்தரவு
கோவில் பணியாளர் ஓய்வூதியம் ரூ.2 ஆயிரமாக உயர்வு ஜெயலலிதா அறிவிப்பு
திமுக- காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது கருணாநிதியுடனான சந்திப்புக்கு பிறகு திருநாவுக்கரசர் பேட்டி
பாதிக்கப்பட்ட தமிழர்களின் உடமைகளுக்கு கர்நாடகா இழப்பீடு தரவேண்டும்; வைகோ பேட்டி
மு.கஸ்டாலினுடன் ஜி.கே வாசன் சந்திப்பு உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி சூசக தகவல்
கடும் தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது: பெங்களூரு மக்களின் குடிநீர் உரிமையை உறுதி செய்ய வேண்டும் சுப்ரீம் கோர்ட்டில் மனு
காஷ்மீர் தாக்குதல் ‘பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுங்கள்’ உயிர்நீத்த வீரரின் மனைவி–மகள் மோடிக்கு வேண்டுகோள்
‘‘உரிய நேரத்தில், உரிய இடத்தில் பதிலடி கொடுப்போம்’’ இந்திய ராணுவம் உறுதி
நாளை முதல் 30-ந் தேதி வரை, வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் தமிழகத்துக்கு 10 நாட்கள் தண்ணீர் தரவேண்டும் கர்நாடக மாநில அரசுக்கு காவிரி மேற்பார்வை குழு உத்தரவு
சுப்ரீம் கோர்ட்டில் சசிகலா புஷ்பாவின் மேல்முறையீட்டு மனு மீது 23–ந் தேதி விசாரணை
காஷ்மீர் தாக்குதல் சம்பவம் உலக நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு
கல்லூரி விழாவில் ஒடிசா மந்திரி மீது நாற்காலிகள் வீச்சு
எல்லையை மறந்து ‘கிங்பிஷர் பறவையை போல் விஜய் மல்லையா பறந்துவிட்டார்’ மும்பை ஐகோர்ட்டு கருத்து
ரஷிய பாராளுமன்ற தேர்தலில் புதின் கட்சி அமோக வெற்றி
அணிசேரா நாடுகள் மாநாட்டில் காஷ்மீர் பிரச்சினையை பாகிஸ்தான் எழுப்பியது ‘ஐ.நா. தீர்மானத்தின்படி தீர்வு காணப்படவில்லை’ என புலம்பல்
காஷ்மீர் தாக்குதலுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் கடும் கண்டனம்
டைனோசர்களின் மிகப்பெரிய அழிவுக்கு ஒரின சேர்க்கையே காரணம் -பிரபல விஞ்ஞானி தகவல்
💰💰 தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
2955(No change) 24 காரட் 10கி
31600(No change)
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
49300 (No change) பார் வெள்ளி 1 கிலோ
46100 -10(-0.02%)
மார்பிள்’ இறக்­கு­மதி கட்­டுப்­பா­டுகள் நீக்கம்; சுங்க வரி 3 மடங்கு அதி­க­ரிப்பு; மத்­திய அரசு நட­வ­டிக்கை
வாகன உதி­ரி­பாக வணிகம் ரூ.2 லட்சம் கோடியை எட்டும்
நேபா­ளத்தில் மூலிகை பூங்கா; பதஞ்­சலி நிறு­வனம் அமைக்­கி­றது
சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்கு உதவி; அலி­பாபா குழுமம் ஒப்­பந்தம்
தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட்: ‘எங்களது சுழற்பந்து வீச்சாளர்கள் ஆடுகளத்தை தவறாக கணித்து விட்டனர்’ தோல்விக்கு பிறகு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பயிற்சியாளர் பதானி பேட்டி
இலங்கை கிரிக்கெட் வீரர் தினேஷ் சந்திமால் காயம் மருத்துவமனையில் அனுமதி
நியூசிலாந்து ஒரு நாள் போட்டி அணியில் ஆண்டர்சன்
விமர்சனங்களுக்கு ஒருவருக்கொருவர் பதிலடி: லியாண்டர் பெயஸ்–சானியா மிர்சா திடீர் மோதல்
பாரா ஒலிம்பிக் கோலாகல நிறைவு விழா பதக்கப்பட்டியலில் சீனா முதலிடம்
மேட்டூர் அணை திறக்கப்பட்டது.. பொங்கி பாயும் புதுப்புனல்… நடந்தாய் வாழி காவிரி….
வீடியோ பதிவுடன் இன்று ராம்குமார் உடலுக்கு போஸ்ட்மார்ட்டம்! ஸ்வாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார், சென்னை புழல் சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். தற்கொலை செய்து கொண்டதாக போலீசாரால் கூறப்படும் அவருடைய உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது. இது வீடியோவிலும் பதிவு செய்யப்படுகிறது!
மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு! மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக இன்று நீர் திறக்கப்பட்டது. கடந்த வாரம் தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபடி இன்று காலை நீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் டெல்டா விவசாயிகள் பாசன வசதி பெறுவர்!
பெங்களூருவில் 25 வரை 144! காவிரி விவகாரத்தில் தமிழர்களுக்கு எதிராக எழும்பிய வன்முறையைத் தொடர்ந்து, பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் வரும் 25ம் தேதி வரை அங்கு 144 தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. வன்முறைகளைத் தடுக்க பெங்களூரு முழுவதும் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் போலீசார்!
கோல்டன் க்ளோப் விருதுக்குச் செல்லும் ‘சில சமயங்களில்’! ப்ரியதர்ஷன் இயக்கத்தில் பிரகாஷ் ராஜ் நடித்துள்ள படம் ‘சில சமயங்களில்’. இப்படம் திரையுலகில் முக்கியமான கோல்டன் க்ளோப் விருதுக்கான திரையிடலுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து, “உண்மைதான்… கனவு நிறைவேறியுள்ளது” என ட்வீட்டியுள்ளார் பிரகாஷ் ராஜ்!
உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மாணவர்கள் அஞ்சலி! உரி தீவிரவாதத் தாக்குதலில் சுமார் 20 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். அவர்களுக்கு திரிபுரா மாநில மாணவர்கள் நேற்று இரவு வீர அஞ்சலி செலுத்தினர். அகர்தலாவில் நடந்த ஊர்வலத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்!
காவிரி: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை! காவிரி பிரச்சனை தொடர்பாக தமிழக-கர்நாடக மாநிலங்களுக்கு இடையே பதற்றமான சூழ்நிலை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், காவிரி பங்கீடு தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இதையடுத்து, கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் இன்று கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது!
உரி தாக்குதல்: பிரணாப்- மோடி சந்திப்பு! உரி தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியுடன் ஆலோசனை நடத்தினார் பிரதமர் நரேந்திர மோடி. ஜனாதிபதி மாளிகையில் நேற்று மாலை இந்தச் சந்திப்பு நடைபெற்றது. உரி தாக்குதலையொட்டி உலக நாடுகள் பாகிஸ்தானைத் தனிமைப் படுத்த வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது!
பெண்களை பாதுகாக்க வேண்டிய சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது: அமிதாப் பச்சன்
காங்கோ நாட்டில் எதிர்கட்சியினர் பேரணியில் வன்முறை ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ளது காங்கோ ஜனநாயக குடியரசு நாடு. காங்கோ நாட்டின் தலைநகர் கின்ஷாசாவில் எதிர்க்கட்சியினர் நடத்திய பேரணியில் வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறை சம்பவத்தில் மூன்று போலீசார் உட்பட 17 பேர் உயிரிழந்துள்ளதாக காங்கோ அரசு தெரிவித்துள்ளது.
காஷ்மீர் பிரச்சனையில் தலையிடுங்கள்:  ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பொதுசபை கூட்டம் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அமெரிக்கா சென்றுள்ளார்.அமெரிக்கா சென்றுள்ள ஷெரீப் அந்நாட்டு வெளியுறவுத் துறை செயலாளர் ஜான் கெர்ரி மற்றும் நியூசிலாந்து பிரதமர் ஆகியோரை சந்தித்துள்ளதாக ஐ.நா.விற்கான பாகிஸ்தான் தூதர் மலீகா லோதி தனது டுவிட்டர் வலைதளத்தில் கூறியுள்ளார்.ஜான் கெர்ரி உடனான சந்திப்பின் போது, காஷ்மீர் பிரச்சனையில் அமைதியான தீர்வு கிடைக்க அமெரிக்கா தலையிட வேண்டும் என்று நவாஸ் ஷெரீப் வலியுறுத்தினார்.
பயங்கரவாதத்துக்கு எதிராக ராணுவத்தை பயன்படுத்த 62 சதவீத இந்தியர்கள் ஆதரவு
டாடா நிறுவனத்தின் கூடாரங்களை இடிக்க தொடங்கியது மேற்குவங்க அரசு
பாரா ஒலிம்பிக் கோலாகல நிறைவு விழா: பதக்கப்பட்டியலில் சீனா முதலிடம்
மணமான 11 நாளில் மாஜி காதலனுடன் புதுப்பெண் ஓட்டம்
பெரணமல்லூர் அருகே திருமணமான 11 நாளில் மாஜி காதலனுடன் புதுப்பெண் ஓட்டம் பிடித்தார். இச்சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.