காலை செய்திகள்

 • சென்னை: மின் உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு பெற்ற மாநிலமாக விளங்குவதாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுடனான சந்திப்பிற்கு பின் முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார். மத்திய மின்துறை அமைச்சர் பியூஸ் கோயல் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை தலைமை செயலகத்தில் இன்று மாலை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: மின் உற்பத்தியில் தமிழகம் மின்மிகை மாநிலமாக விளங்குகிறது. கடந்த 5 ஆண்டுகளில் 8,432 மெகாவாட் மின்சாரம் மாநில மின் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.
 • முதல்வர் ஜெயலலிதாவுடன் பியூஷ் கோயல்
         முதல்வர் ஜெயலலிதாவுடன் பியூஷ் கோயல்
 • ஊத்தங்கரை சாமல்பட்டியில் காமராசர் பிறந்தநாள் பேனருக்கு சமூகவிரோதிகள் தீ வைப்பு. சமூக விரோதிகளை கைது செய்ய காவல் நிலையம் முற்றுகை.
 • மாணவர்களின் வீடுகளுக்கே சென்று அவர்களை எழுப்பிவிடும் வித்தியாசமான ஆசிரியர்கள்! சத்தீஸ்கர் மாநிலத்தின் கிராமம் ஒன்றில், பள்ளி மாணவர்களை, அவர்களின் வீடுகளுக்கே சென்று ஆசிரியர்கள் எழுப்பிவிடும் வித்தியாசமான முயற்சி நடைபெற்று வருகிறது.
 • இந்த ஆண்டில் இந்தியா திரும்ப மாட்டேன்’’ மதபோதகர் ஜாகீர் நாயக்
 • கைஇருப்பில் ரூ.15 லட்சத்துக்கு மேல் வைத்திருக்கக்கூடாது ரூ.3 லட்சத்துக்கு மேல் ரொக்க பரிவர்த்தனைக்கு தடை கருப்பு பணத்தை கட்டுப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு சிபாரிசு
 • பெட்ரோல் விலை லிட்டருக்கு 2.25 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 42 காசுகளும் குறைக்கப்பட்டது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது
 • உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே பேருந்துகளில் மாணவர்கள் படிக்கட்டு, மேற்கூரை ஆகியவற்றில் ஆபத்தான பயணம் மேற்கொள்வது தொடர்வதால் கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 • ரேக்கிங்” முதலாமாண்டு மாணவன் தற்கொலை முயற்சி; 4 மாணவர்கள் உள்பட 5 பேர் கைது/
 • ஈரோடு: 100 ஆண்டு பழமை வாய்ந்த ஆலமரத்தை மின்வாரியத்தினர் வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் இயந்திரத்தை கிராம மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 • இந்தியா-இங்கிலாந்து தொடர் அட்டவணை அறிவிப்பு
 • புதுடில்லி:இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. இவ்விரு அணிகள் வரும் டிச., 16ல் சென்னையில் துவங்கும் 5வது டெஸ்டில் மோதுகின்றன. இந்த ஆண்டு இறுதியில் இந்தியா வரவுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட், 3 ஒருநாள், 3 சர்வதேச ‘டுவென்டி-20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இத்தொடருக்கான அட்டவணையை, பி.சி.சி.ஐ., நேற்று அறிவித்தது.
 • தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்க்கெட்டுவிட்டதாக திமுக பொருளாளர் முக ஸ்டாலின் குற்றம் சாட்டினார். கொலை, குற்றங்கள் அதிகரித்து விட்டதாக முக ஸ்டாலின் புகார் கூறினார். கொலை, கொள்ளை சம்பவங்களை கட்டுப்படுத்தும் திறன் அதிமுக அரசுக்கு இல்லை என்றும் கடந்த 5 ஆண்டு அதிமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
 • குற்றாலத்தில் அரியவகை பழங்கள், அழகு செடிகள் விற்பனை ஜரூர். குற்றாலத்தில் சீசன் களை கட்டியுள்ளதால் அரிய வகை பழங்கள், அழகு செடிகள் மற்றும் மலர் விற்பனை அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகள் இவற்றை ஆர்வமுடன் வாங்கிச்செல்கின்றனர். குற்றாலம் சீசனுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதுடன் குற்றாலத்தில் குவிந்துள்ள அரிய வகை பழவகைகளையும் வாங்கிச்செல்வது வழக்கம்.
 • குழந்தை தொழிலாளர்கள் மீட்பு/ திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் ஏராளமான குழந்தை தொழிலாளர்கள் இருப்பதாக திருவாரூர் சைல்டுலைன் நம்பருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து சிறப்பு உதவி ஆய்வாளர்கள் இளமாறன், சுந்தரமூர்த்தி, தலைமை காவலர்கள் நடராஜன், பன்னீர்செல்வம் ஆகியோர் முத்துப்பேட்டை பகுதியில் கடைகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
 • பாலபாரதி தலைமையில் ஆர்ப்பாட்டம். திண்டுக்கல் மணிக்கூண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 • சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
 • கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே கர்ப்பிணி மனைவி வளர்த்த நாயை கணவர் அடித்துக் கொன்றதால், மனைவி தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து கணவரும் தற்கொலை செய்து கொண்டார்.
 • 6 மாதம் கெட்டுப்போகாத 8 வகையான உணவுகள்… ரயில் பயணிகளுக்காக ஐஆர்சிடிசி அறிமுகம்
 • சிலை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தொழிலபதிர் தீனதயாளன் ஜாமீன் மனுவை சென்னை எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
 • ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் ஜெயேந்திரர் உள்ளிட்ட 9 பேரின் விடுதலையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
 • கருப்புப் பண தடுப்பு சட்ட வழக்கு தில்லி உயர் நீதிமன்றத்தில் வீரபத்ர சிங் புதிய மனு
 • பட்டினப்பாக்கம்’ நந்தினி குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி… ஜெ. உத்தரவு
 • தமிழகத்தில் வரும் 17, 18ம் தேதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 • சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் வருகை நாள் போதாது எனக் கூறி மீண்டும் ஓராண்டு வகுப்புக்கு வர 5 மாணவர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
 • உடுமலையில் ராணுவ பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. உடல் நலம்ம பாதித்த 26 மாணவர்களும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.
 • ராம்குமாரை புழல் சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரும் 18-ம் தேதி ராம்குமாரை மீண்டும் ஆஜர்படுத்த எழுப்பூர் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டுள்ளார். நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ராம்குமார் 3 நாள் விசாரிக்கப்பட்டார். சுவாதி கொலை குறித்து போலீசிடம் ராம்குமார் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 • புனேயில் தங்க சட்டை அணிந்து பரபரப்பை ஏற்படுத்தியவர் அடித்துக் கொலை இந்த கொலையில் ஈடுபட்டவர் யார் என இன்னும் போலீசாரால் கண்டு பிடிக்க முடியவில்லை .
 • 1997ம் ஆண்டு மாணிக்கம், செல்வராஜ் இருவரும் திண்டுக்கலில் கொலை செய்யப்பட்டனர். இந்த இரட்டைக் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு.
 • தமிழகம் கொலைக்கஞ்சா மாநிலமாக மாறி வருவதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டினார். ஒரே நாளில் தமிழ்நாட்டில் பத்து பேர் கொலை செய்யப்பட்டுள்ள செய்தியை கருணாநிதி சுட்டிக்காட்டினார். மேலும் காவல்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
 • தமிழகத்துக்கு காவிரியில் வரும் நீர் அளவு வினாடிக்கு 10,000 கன அடியாக உயர்ந்துள்ளது. தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் பிலிகுண்டுலுவில் வினாடிக்கு 10,000 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று வினாடிக்கு 6,000 கன அடியாக இருந்த நீர்வரத்து ஒரே நாளில் 4,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
 • ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் பகுதியில் உள்ள காவல் நிலையத்தின் மீது தீவிரவாதி நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் ஒரு காவலர் உயிரிழந்தார். மேலும் இத்தாக்குதலில் 5 காவலர்கள் காயம் அடைந்தனர்.
 • மதுரை விளாங்குடியில் உள்ள துணிக்கடை கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கிடங்கில் ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர்.
 • சென்னை-யில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு
 • மின்கட்டணத்தை மாதம் ஒருமுறை வசூலிக்குமாறு தொடர்ந்த வழக்கு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி
 • புதுடெல்லி: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவரை நியமிப்பது தொடர்பாக கட்சி மேலிடம் மேற்கொண்டுள்ள ஆலோசனை இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
 • நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பள்ளி சென்று திரும்பி போது பள்ளி வாகனத்தில் சிக்கி UKG பயிலும் மாணவன் பொன்பிரகாஷ் பலி. ஓட்டுனரின்  கவனக்குறைவே  காரணம் என முதல் கட்ட தகவல் .

Leave a Reply

Your email address will not be published.