Random image

காலை செய்திகள்

jaya letter

🌍பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்: பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: இந்திய கடல் எல்லையில் கடந்த 8ம் தேதி மீன் பிடித்து கொண்டிருந்த ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 4 பேரையும், படகையும் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றுள்ளனர்.  மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு இலங்கையின் உயர் அதிகாரிகளுடன் பேசி 4 மீனவர்களை விடுவிப்பதுடன் இலங்கை அரசு பிடித்து வைத்துள்ள 103 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கடிதத்தில் கூறியுள்ளார்/

🌍கூடங்குளம் அணுமின் நிலையத்தின் இரண்டாவது அலகை விரைந்து செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டுமென முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்தார்.

🌍ஜாதி கணக்கெடுப்பு:  நிபுணர் குழு அமைப்பு:  ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு விபரங்களை தொகுக்க, நிபுணர் குழுவை, மத்திய அரசு அமைத்துள்ளது. ராஜ்ய சபாவில் நேற்று, மத்திய உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர் எழுத்து மூலம் அளித்த பதில்: எஸ்.இ.சி.சி., எனப்படும், சமூக, பொருளாதாரம் மற்றும் ஜாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளது. ஆனாலும், அதில், இடம்பெற்றுள்ள தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், அதில் இடம்பெற்றுள்ள ஜாதி அடிப்படையிலான விபரங்களை தொகுக்க, நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. மத்திய சமூக நீதித் துறையின் கீழ், இந்த குழு செயல்படும். இவ்வாறு அவர் அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளது.

cbsec

🌍சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை மாற்ற அரசு திட்டம்  மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை மாற்ற, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்கான, கருத்து கேட்பு கூட்டம், டில்லியில் நடக்கவுள்ளது.உலகில் மாறி வரும் தொழில்நுட்பம், கல்வியின் தேவை, மாணவர்களின் எண்ண ஓட்டங்களுக்கு ஏற்ப, பாடத்திட்டங்களை மாற்றி அமைக்க வேண்டியது அவசியம். இதன்படி, சி.பி.எஸ்.இ., அமைப்பு, தங்கள் பள்ளி களுக்கான பாடத்திட்டத்தை மாற்றி, தரம் உயர்த்த முடிவு செய்துள்ளது.இதற்கான கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், பெற்றோர்களின் கருத்து கேட்பு உயர்மட்ட ஆலோசனை கூட்டம், டில்லியில் வரும், 23, 24ம் தேதிகளில் நடக்கிறது. இதில், பாடத்திட்டம், தேர்வு முறைகளில் மாற்றம் கொண்டு வருதல், மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான பாடத்திட்டம் ஏற்படுத்துதல் போன்ற, அம்சங்கள் விவாதிக்கப்பட உள்ளன.

🌍தமிழக முதலீட்டாளர்களுக்கு ராஜஸ்தான் அரசு அழைப்பு: ”அன்னிய முதலீடுகளை அதிகளவில் ஈர்ப்பதில், ராஜஸ்தான் மாநிலம் முன்னணியில் உள்ளது,” என, அம்மாநில சுகாதார துறை அமைச்சர் ராஜேந்திர ரத்தோர் தெரிவித்தார்.

🌍உணவுப் பொருட்கள் விலை உயர்வால் ஜூலை மாத பணவீக்கம் உயர்வு: உணவுப் பொருட்களின் விலை உயர்வால், கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத வகையில், இந்தாண்டு ஜூலை மாதம், நாட்டின் சில்லரை பணவீக்கம், 5.90 சதவீதமாக உயர்ந்திருக்கும்’ என, ‘ராய்ட்டர்ஸ்’ நிறுவனம் மதிப்பிட்டுள்ளது

 

🌍துறைமுகம் தொகுதியில் தீவிபத்தில் பாதித்தவர்களுக்கு வீடுகள் கட்டித் தர வேண்டும்: பேரவையில் திமுக உறுப்பினர் கோரிக்கை.

gold

🌍தங்கக் கட்டிகள் கடத்தல்: ஏர் இந்தியா மூத்த பைலட் கைது  ஏர் இந்தியா மூத்த பைலட் ஒருவர், தங்கக் கட்டிகளை கடத்த முயன்றதால் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ரூ.15.65 லட்சம் மதிப்புள்ள தங்கக் கட்டிகளை கடத்தல் செய்ய முயன்றதால் மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

 

🌍பிரதமர் தலைமையில் நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம் காஷ்மீர் விவகாரத்துக்குத் தீர்வு காண்பதற்காக பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம், நாளை வெள்ளிக்கிழமை (ஆக.12) நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

terrtost

🌍2 ஆண்டுகளில் 45,000 பயங்கரவாதிகள் கொலை: சிரியா மற்றும் ஈராக்கில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 45,000 ஐஎஸ் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படை தெரிவித்துள்ளது.கூட்டு படை அதிகாரி ஒருவர் இது பற்றி கூறுகையில் , அதிகாரப்பூர்வமாக ஐ.எஸ் அமைப்பானது 25 ஆயிரம் கிலோ மீட்டர் பரப்பளவை ஈராக் மற்றும் சிரியாவில் இழந்துள்ளது. அது ஈராக்கில் 50 சதவீதமும், சிரியாவில் 20 சதவீதமும் ஆகும். ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படை கடுமையான சண்டையிட்டுள்ளது. 45 ஆயிரம் ஐ.எஸ். பயங்கரவாதிகள் கடந்த இரண்டே ஆண்டுகளில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதில் கடந்த 11 மாதத்தில் 25 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

🌍மும்பையில் கட்டிடத்தின் 5வது மாடி சரிந்து விழுந்தது மும்பையில் உள்ள ஒரு கட்டிடத்தின் 5வது மாடி நேற்று இரவு சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கியிருந்த 3 பேரை தீயணைப்பு அதிகாரிகள் மீட்டுள்ளனர். மேலும் இறப்புக்கள் ஏதும் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

🌍துருக்கியில் வெடிகுண்டு தாக்குதல்: 8 பேர் பலிதுருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சிர்நாக் மாகாணத்தின் எல்லைக்குட்பட்ட உளுதேர் மாவட்டத்தில் குர்திஷ் போராளிகள் நேற்று நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது.

🌍சுதந்திர தினத்தை முன்னிட்டு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.எனவே தமிழகம் உள்பட நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன. கடலோர காவல் படை 24 மணி நேரமும் ரோந்தில் ஈடுபட்டிருக்கும்.இரவு நேரங்களில் சாலைகளில் ரோந்துப் பணி அதிகரிக்கப்படும்.

🌍ஜம்மு – காஷ்மீரில் கலவரங்கள் தொடர்ந்து நடந்து வருவதற்கு, தடை செய்யப்பட்ட லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாத அமைப்பே காரணம்’ என, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்பு திட்டவட்டமாக கூறியுள்ளது.

🌍எல்லை தாண்டிய தீவிரவாதம் தொடர்பான இந்தியாவின் குற்றச் சாட்டுக்கு பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ளது.

🌍பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் 7 ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்த பின்னர் நிரபராதி என்று மும்பை ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியது. இதனால் தண்டனை அனுபவித்த நபர் மகாராஷ்டிரா அரசிடம் ரூ. 200 கோடி நஷ்டஈடு கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.

🌍மும்பையில் போலி சாதிச் சான்றிதழ் கொடுத்து எம்பிபிஎஸ் சேர்ந்த 19 மருத்துவ மாணவர்கள் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

train

🌍ஓடும் ரயிலில் கொள்ளை: சேலம் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு; ரயிலில் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக சேலம் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்தியன் ரயில்வே பாதுகாப்புப் படை இயக்குனர் எஸ்.கே.பகத், ஜ.ஜி.பாரி ஆகியோர் சேலத்தில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

🌍சேலம் விரைவு ரயில் மேற்கூரை உடைக்கப்பட்டு வங்கிப் பணம் ரூ.5.75 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு, சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டது.

🌍ரயிலில் வங்கிப் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்துக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

🌍இணையதளத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு எண்ணிக்கையை ஒரு நிமிடத்துக்கு 12,900 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது–ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு

hang

🌍வங்கதேச விடுதலைப் போரின்போது போர்க் குற்றத்தில் ஈடுபட்டதாக மதவாத ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஷாகவத் ஹுசைனுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

🌍பிகார் மாநிலம், லக்கிசராய் மாவட்டத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் சிறப்பு அதிரடிப் படை வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

🌍ஹஜ் புனிதப் பயணத்துக்கு ஜம்மு-காஷ்மீரிலிருந்து 340 பேர் கொண்ட முதல் குழு நேற்று சென்றது.

🌍24 மணி நேரமும் புகார் தெரிவிக்கலாம் குமரி மாவட்ட காவல் துறையில் வாட்ஸ் அப் ஹெல்ப் லைன் 9514800100

🌍தூத்துக்குடியில் பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றிய பேஸ்புக் காதலனை பிடிக்க தன்னை வாலிபர் காரில் கடத்தி பலாத்காரம் செய்ததாக நாடகமாடிய கல்லூரி மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

🌍விஜயவாடாவில் உள்ள பொதுப்பணித்துறை மைதானத்தில் கிருஷ்ண புஷ்கராலு நாளை முதல் 23ம் தேதி வரை கோலாகலமாக நடக்கிறது.

🌍பிரதமர் மோடி இந்தியாவில் நிறைவேற்ற விருப்பம் தெரிவித்த சீனாவின் மாடி பஸ் இயக்க திட்டம் மோசடி திட்டம் என்று கூறப்பட்டுள்ள புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

🌍குஜராத் மாநில பாஜ கட்சி தலைவராக எம்எல்ஏ ஜித்து வாகானியை அக்கட்சியின் தலைவர் அமித்ஷா நியமித்துள்ளார்.

🌍பிரதமர் இல்லாத நாடாளுமன்றத்தை இந்திய தேசம் கண்கூடாகப் பார்க்கிறது என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. நாடாளுமன்ற அலுவல்களில் பிரதமர் மோடி சரிவரப் பங்கேற்பதில்லை என்று குற்றச்சாட்டை முன்னிறுத்தி இந்தக் கருத்தை அக்கட்சி தெரிவித்துள்ளது.

🌍பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீட்டுக்கு வகை செய்யும் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற அனைத்து கட்சியினரும் ஆதரவளிக்க வேண்டும் என்று பாஜக எம்.பி. கஜேந்திர சிங் ஷெகாவத் வலியுறுத்தியுள்ளார்.

🌍அரசு கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்களில் தங்கியுள்ள சிறார்களுக்கு ஆற்றுப்படுத்துதல் (கவுன்சலிங்) சேவை ரூ.16.20 லட்சம் செலவில் வழங்கப்பட உள்ளது என்று சமூக நலத் துறை அமைச்சர் வி.சரோஜா அறிவித்தார்.

🌍திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீஸாருக்கு இறுதி வாய்ப்பாக 2 மாதம் அவகாசம் அளித்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

🌍கோவை அல்லது ஈரோடு ரயில் நிலையத்தில், ரயில் பெட்டியில் துளையிடப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது என, திருச்சி ரயில்வே கோட்ட எஸ்.பி. ஆனி விஜயா கூறினார்.

supreme

🌍நாடு முழுவதும் 2.18 கோடி வழக்குகள் தேக்கம்: சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் வெளியிட்டுள்ள புள்ளிவிபர கணக்கின்படி இந்த ஆண்டு மே 31 வரை, நாடு முழுவதிலும் உள்ள நீதிமன்றங்களில் 2.18 கோடி வழக்குகள் தீர்க்கப்படாமல் உள்ளன. இவற்றில் 59.3 லட்சம் வழக்குகள் சுமார் 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் தீர்க்கப்படாமல் உள்ளது.மேலும் 22.3 லட்சம் வழக்குகள் 10 ஆண்டுகளுக்கு மேல் தீர்க்கப்படாமல் உள்ளது. 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் முடிக்கப்படாத வழக்குகள் உள்ள மாநிலங்களில் உ.பி., முதலிடத்தில் (6.6 லட்சம்) உள்ளது. குஜராத் – 5.2 லட்சம், மகாராஷ்டிரா – 2.51 லட்சம், பீகார் – 2.3 லட்சம், ஒடிசா – 1.83 லட்சம். இவற்றில் மிக குறைந்த பட்சமாக பஞ்சாப்பில் தான் 1328 வழக்குகள் 10 ஆண்டுகளுக்கும் மேல் தீர்க்கப்படாமல் உள்ளது.மூத்த குடிமக்களால் தொடரப்பட்டு வழக்குகள் அதிகம் உள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரா – 2.07 லட்சம், கர்நாடகா – 1.07 லட்சம், தமிழகம் – 64,018, உ.பி., – 63,762, குஜராத் – 49,837 உள்ளன.

 

🌍அகமதாபாத் மாணவி தன்ஸீம் மேரானி கவனம் ஈர்க்கும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.அதாவது, சுதந்திர தினத்தன்று ஸ்ரீநகர் லால் சவுக்கில் தேசியக் கொடியை ஏற்ற உள்ளதாக அறிவித்துள்ளார்.அனுமதிக்காவிட்டால் அங்கே உண்ணாவிரத போராட்டம் நடத்தவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

🌍தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் மீதான 14 அவதூறு வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

🌍சென்னை அருகே மாயமான விமானத்தைத் தேடும் பணியில் மேலும் ஒரு ஆராய்ச்சிக் கப்பல் ஈடுபட்டுள்ளது.

🌍இலங்கையில் முன்னாள் போராளிகள் மர்மமான முறையில் உயிரிழக்கும் சம்பவத்துக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

gold

🌍ரூ. 24,000ஐ நெருங்கும் தங்கம்:  தங்கம் விலை கடந்த மாதம் 30ம் தேதி 3 ஆண்டுகளில் இல்லாத அளவாக சவரன் ரூ.344 அதிகரித்து ரூ.24,040க்கு விற்கப்பட்டது. தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.272 அதிகரித்து ரூ.24,000ஐ நெருங்கியது. கிராம் ரூ.2,990க்கும் சவரன் ரூ.23,920க்கும் விற்பனையானது. ”நியூயார்க்கில் அடுத்த மாதம் நடைபெறும் பெடரல் வங்கி கூட்டத்தில் வட்டி குறைப்பு முடிவு செய்யப்பட்டால் தங்கம் விலை குறையும்; அதுவரை உயரும்” என சென்னை தங்கம் மற்றும் வெள்ளி வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியுள்ளார்.