டெல்லி டேர் டெவில்ஸ் அணியின் கிறிஸ் மோரிஸின் அதிரடி; குஜராத் ஒரு ரன் வித்யாசத்தில் வெற்றி ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 23-வது ஆட்டம் குஜராத் லயன்ஸ் அணியும், ஜாகீர் கான் தலைமையிலான டெல்லி டேர் டெவில்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரர்களான ஸ்மித்தும் மெக்கல்லமும் குஜராத் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரில் 18 ரன்கள் சேர்த்து ஸ்மித் இன்னிங்சை தொடங்கினார். இந்த தொடக்கமானது, டெல்லி அணிக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்தது. 27 பந்துகளில் மெக்கல்லம் அரை சதத்தை கடந்தார்.
டெல்லி அணி சுழற்பந்து வீச்சாளர்கள் ஆட்டத்தை தலைகீழாக மாற்றினர் கூறிப்பாக இம்ரான் தாஹிரின் மற்றும் வேக பந்து வீச்சாளர் கிறிஸ் மோரிஸ். குஜராத் அணியின் வீர்கள் வெய்ன் ஸ்மித், மெக்கல்லம், சுரேஷ் ரெய்னா அவுட் அக குஜராத்தின் ரன் வேகம் தடம் புரண்டது. குஜராத் லயன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 172 ரன்களை சேர்த்தது.
FotorCreated
 
அடுத்து 173 ரன்கள் இலக்கை நோக்கி டெல்லி அணி விளையாடியது. டெல்லி அணி தொடக்கத்தில் தடுமாற்றத்துடன் விளையாடி, 16 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. இந்த தருணத்தில், டெல்லி அணி தோல்வி அடைந்துவிடும் என்று கருதப்பட்டது. ஆனால் டுமினியுடன், மோரிஸ் ஜோடி சேர்ந்தார். மோரிஸ் அடிக்கும் பந்துகள் எல்லாம் எல்லைக் கோட்டிற்கு வெளியே சென்றது. 17 பந்துகளில் அரை சதம் எடுத்தார் மோரிஸ்.
டெல்லி அணி வெற்றிபெற, கடைசி 2 ஓவர்களில் 18 ரன்கள் தேவைப்பட்டது. பிரவின் குமார் 19-வது ஓவரை மிகவும் கட்டுக் கோப்பாக வீசி 4 ரன்களை மட்டுமே கொடுத்தார். கடைசி ஓவரில் 15 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை; ஆட்டத்தில் மிகவும் பரபரப்பு ஏற்பட்டது. பிராவோ கடைசி ஓவரை வீசினார். முதல் பந்திலே மோரிஸ் பவுண்டரி விளாசினார். கடைசி பந்தில் 4 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. திறமையாக பிராவோ பந்தை வீச, இரண்டு ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
மோரிஸ் 32 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதில் 4 பவுண்டரிகளும், 8 சிக்ஸர்களும் அடங்கும். சுரேஷ் ரெய்னாவின் குஜராத் அணி தனது 5 வது வெற்றியைக் கொண்டாடியது.
குஜராத் 172/6 ( ஸ்மித் 53, மெக்கல்லம் 60, இம்ரான் தாஹிர் 3/24, கிறிஸ் மோரிஸ் 2/35) டெல்லி 171/5 (கிறிஸ் மோரிஸ் 82*, டுமினி 48, குல்கர்னி 3/19)