மும்பை:

மகாராஷ்டிர தலைமைச் செயலக கேண்டீனில் ‘சர்வர்’ பணிக்கு விண்ணப்பித்த 7 ஆயிரம் பேரில், பெரும்பாலோர் பட்டதாரிகள் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.


இது குறித்து மகாராஷ்டிர தலைமைச் செயலக அதிகாரிகள் கூறும்போது, “மகாராஷ்டிரா அரசு தலைமைச் செயலகத்தில் உள்ள கேண்டீனில் காலியாகவுள்ள 13  ‘சர்வர்’  பணி இடங்களுக்கு 7 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர்.

விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலோர் பட்டதாரிகள் ஆவர்.

கேண்டீன் ‘சர்வர்’ பணிக்கான 13 இடங்களில் 12 இடங்களில் பட்டதாரிகள் நியமிக்கப்பட்டனர். இந்த பணிக்கு 100 மதிப்பெண்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது.

டிசம்பர் 31-ம் தேதி தேர்வு நடைமுறைகள் நிறைவு பெற்றன. தற்போது தேர்வானவர்களை பணியமர்த்தி வருகின்றோம். 8 ஆண்களும், ஒரு பெண்ணும் பணியில் சேர்ந்துள்ளனர். 4 பேர் இன்னும் சேரவில்லை என்றனர்.

கடந்த ஆண்டு இதேபோன்று, சென்னை உயர்நீதி மன்றத்துக்கு துப்புரவு பணியாளர்களுக்கான பணியிடங்களுக்கு, பிஹெச்.டி படித்தவர்கள் ஏராளமானோர் விண்ணப்பித்திருந்து குறிப்பிடத்தக்கது.