கன மழை: காஞ்சிபுரத்தில் பெரும்பாலான ஏரிகள் நிரம்பியது: பொதுப்பணித்துறை


காஞ்சிபுரம்:

டகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காஞ்சிபுரம் பகுதியில் உள்ள பெரும்பாலான ஏரிகள் நிரம்பி உள்ளதாக பொதுப்பணித்துறை கூறி உள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. அந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

இந்நிலையில், தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக  காஞ்சிபுரத்தில் விவசாய பாசனத்திற்கு பயன்படுத்த கூடிய பெரும்பாலான ஏரிகள் நிரம்பி உள்ளதாகவும், தற்போது  98 ஏரிகள் நிரம்பி உள்ளதாகவும் பொதுப்பணித்துறை தலைமை அதிகாரி முத்தையா தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம்  மாவட்டத்தில்  200-க்கும் மேற்பட்ட ஏரிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.