டெல்லி கலவரம்: மத்தியஅரசுக்கு ப.சிதம்பரம் கடும் கண்டனம்

டெல்லி:

டெல்லியில் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு காவல்துறை துப்பாக்கி சூடு நடைபெற்றது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

வடகிழக்கு டெல்லி பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை சிஏஏ ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர் களுக்கும் இடையே  கலவரம் நடந்தது. இது இன்று 3வது நாளாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், கலவரத்தின்போது, வன்முறையாளர்கள் வீசிய கல் வீச்சில் காவல்துறையினர் பலர் காயம் அடைந்த நிலையில் தலைமை காவலர் ஒருவர் மரணம் அடைந்தார். இதையடுத்து  காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தி வன்முறையை கட்டுப்படுத்தினர்.

இந்த வன்முறையில்  இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர், 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கண்டித்து டிவிட் பதிவிட்டுள்ளார்.

அதில், ” டெல்லி வடகிழக்குப் பகுதியில் நடந்த கலவரத்தில் தலைமைக் காவலர் உள்ளிட்ட பலர் உயிரிழந்தது கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இந்த கலவரத்துக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன்.

கடந்த 1955-ம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தில் எந்தவிதமான திருத்தமும் இல்லாமல்தான் இந்தியா வாழ்ந்து வந்தது. அந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதன் அவசியம் என்ன, அந்த திருத்தத்தை உடனடியாக நீக்க வேண்டும்.

இப்போதுகூட ஒன்றும் தாமதம் ஏற்படவில்லை. குடியுரிமைத் திருத்தச்சட்டத்துக்கு எதிராகப் போராடுபவர்களின் குரல்களைக் கேட்டறிந்து, கோரிக்கைகளை இறந்து சிஏஏ சட்டத்தை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வரும்வரை செயல்படுத்தாமல் நிறுத்தி வைக்க வேண்டும். குடியுரிமைத் திருத்தச்சட்டம் சமூகத்தில் ஆழமான பிளவுகளை ஏற்படுத்தும் என்று எங்கள் கட்சி எச்சரித்தது. உடனடியாக அந்த சட்டத்தை ரத்து செய்யுங்கள் என்று தெரிவித்து உள்ளர்.