சுங்கச்சாவடியில் பணி புரியும் ரவுடிகள் : மதுரை உயர்நீதி மன்றம் கண்டனம்

துரை

மிழக சுங்கச்சாவடிகளில் பெரும்பாலும் ரவுடிகளும் சமூக விரோதிகளும் பணியில் அமர்த்தப்படுவதாக மதுரை உயர்நீதிமன்றக் கிளை  கண்டனம் தெரிவித்துள்ளது.

மதுரையில் மேலூர் பகுதியை சேர்ந்தவர் பழனிக்குமார்.  இவர் சுங்கச்சாவடிகளின் செயல் பாடுகள் குறித்து மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.  அந்த மனுவில் தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளின் ஊழியர்கள் முறை கேடு செய்வதாகவும், ஆம்புலன்ஸ் போன்ற அவசர வாகனங்கள் செல்ல தனி வழியோ, முறையான பாதைகளோ இல்லை என தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை விசாரிக்கும் போது மதுரை உயர் நீதி மன்றக் கிளை, சுங்கச்சாவடிகளின் போக்குக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.  மேலும் பெரும்பாலான சுங்கச்சாவடிகளில் ரவுடிகளும் சமூக விரோதிகளுமே பணியில் அமர்த்தப்படுவதாகவும். விதிமுறைகளை மீறும் ஒப்பந்தக்காரர்கள் மீது அரசு எந்த வித நடவடிக்கையும் எடுப்பதில்லை எனவும் தெரிவித்துள்ளது.