சிறையில் உள்ள குல்பூஷனை சந்திக்க மனைவி, தாயார் பாக்.பயணம்!

டில்லி,

பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய கடற்கடை முன்னாள் அதிகாரியான குல்பூஷன் ஜாதவை சந்திக்க அவரது மனைவி மற்றும் தாயார் இன்று பாகிஸ்தான் பயணம் மேற்கொள்கின்றனர்.

 

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரியான குல்பூஷன் ஜாதவ் பாகிஸ்தானில் சதி  ஈடுபட்டதாக கூறி அவரை கைது செய்தது. பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் அவருக்கு தூக்கு தண்டனை விதித்தது.

இதை எதிர்த்து இந்தியா சார்பில் சர்வதேச நீதிமன்றத்தில்  தொடுத்த வழக்கையடுத்து, குல்பூஷனை தூக்கில்போட இடைக்கால தடை விதித்து உள்ளது.

இந்நிலையில், குல்பூஷனை சந்திக்க அவரது தாய் மற்றும் மனைவி விரும்பயதை தொடர்ந்து, இந்தியா சார்பில் பாகிஸ்தானுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

அதையேற்று பாகிஸ்தான் அரசு அவர்களுக்கு கடந்த 20-ம் தேதி விசா அளித்தது. இதையடுத்து, குல்பூஷண் ஜாதவைக் காண, அந்நாட்டுக்கு அவரது தாயாரும், மனைவியும் இன்று செல்லவுள்ளனர்.

குல்பூஷன் ஜாதவை சந்தித்து விட்டு உடனடியாக இருவரும் இந்தியா திரும்புவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுடன் இந்தியத் தூதரக அதிகாரி ஒருவரும் உடனிருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக அலுவலகத்தில் நடைபெறும் என்றும்,  அது தொடர்பான புகைப்படமும், விடியோவும் பிறகு வெளியிடப்படும் என பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது