பெங்களூரு:

மகனை விவகாரத்து செய்து மருமகளுக்கு ரூ. 4.63 கோடி ஜீவனாம்சம் பெற்றுத் தர தாயே உதவி செய்த சுவாரஸ்ய சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் கஷாப்பனவார். இவர் மறைந்த முன்னாள் காங்கிரஸ் அமைச்சர். இவரது மகன் தேவானந்த். இவருக்கு திருமணம் முடிந்துவிட்டது. எனினும் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தார்.

பின்னர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு குழந்தையும் பெற்றுக் கொண்டார். வீட்டில் உள்ள பெற்றோர், குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி இந்த திருமணத்தை செய்து கொண்டார்.

இதையடுத்து அவரது 25 வயது மனைவி விவகாரத்து கோரி பெங்களூரு குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விவகாரத்து வழக்கு தொடர தேவானந்தத்தின் தாயும் உதவி செய்துள்ளார். இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக பிரிந்து வாழ்வது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து மனுதாரர் விவகாரத்து பெற தகுதியுள்ளவராக நீதிமன்றம் கருதியது. வழக்கை விசாரித்த ஐந்தாவது கூடுதல் முதன்மை நீதிபதி, தேவானந்தம் ஒரு முறை பட்டுவாடாவாக ரூ. 4.85 கோடி ஜீவனாம்சமாக வழங்க வேண்டும் என்று தீர்ப்பு கூறினார். தேவானந்தம் குவாரி தொழில் செய்து வருகிறார். அவரிடம் பல சொகுசு கார்கள், கோடி கணக்கில் சொத்துக்கள் உள்ளது.