மன்னார்குடி: பெற்ற  தாயாலேயே கொடூரமாகக் கொல்லப்பட்ட குழந்தைகள்!

கொல்லப்பட்ட குழந்தைகள்மன்னார்குடி:

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம் (40), கல்லூரி விரிவுரையாளர், இவரது மனைவி பெனிட்டா (36) அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், மற்றும் மகள் உள்ளனர்.

கடந்த ஆண்டு இவர்களது மகன் மகள் இருவரும் இருவரும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தனர். பெனிட்டா ரத்தக் காயங்களுடன் குளியல் அறையில் கிடந்தார்.

போலீஸ் பிடியில் பெனிட்டா
போலீஸ் பிடியில் பெனிட்டா

இந்த கொலைப்பற்றி காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஆனால் ஓராண்டாக துப்பு கிடைக்காவில்லை.

இந்த நிலையில் பெனிட்டாவிடம் காவல்துறையினர் மீண்டும் விசாரணை நடத்தினர். அவர்

முன்னுக்குபின்னாக பதில் கூறினார்.  அவரிடம் தொடர்ந்து விசாரித்தபோது, தனது இரு குழந்தைகளையும் தானே கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

பெனிட்டாவுக்கும், அவரது கணவருக்கும் பிரச்சனை ஏற்பட்டதாகவும், அந்த கோபத்தில் குழந்தைகளை கொலை செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

பெற்ற தாயே, குழந்தைகளை கொடூரமாகக் கொன்றது மன்னார்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.