குழந்தையை கொன்று விட்டு காணாமல் போனதாக நாடகமாடிய தாய் கைது

--

சென்னை

சென்னை வேளச்சேரியில் ஒரு மாதக் குழந்தையை கொலை செய்த தாய் கைது செய்யபட்டுள்ளார்.

சென்னை வேளச்சேரி பகுதியில் ஏரிக்கரை அருகே ஒரு குடியிருப்பு உள்ளது.  அங்கு கால் செண்டர் ஊழியர் வெங்கண்ணா (வயது 32) மற்றும் அவர் மனைவி உமா (வயது 27) ஆகியோர் வசித்து வருகின்றனர்.   கடந்த மாதம் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.    அந்தக் குழந்தைக்கு தற்போது ஒரு மாதம் ஆகிறது.

அந்தப் பகுதியில் நேற்று முன் தினம் திடீரென மின் தடை ஏற்பட்டுள்ளது.  அப்போது காற்று இல்லாததல் கதவை திறந்து வைத்துக் கொண்டு வெங்கண்ணா மற்றும் உமா உறங்கி உள்ளனர்.   திடீரென உமா எழுந்து தனது குழந்தையை காணவில்லை என கூச்சல் போட்டுள்ளார்.   இருவரும் குழந்தையை தீவிரமாக தேடி உள்ளனர்.

எங்கும் குழந்தை காணாததால் வேளச்சேரி காவல்நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர்.   காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்கள்.   அப்போது அந்தப் பகுதியில் ரோந்து சென்ற  காவல்துறையினர் ஒரு பெண் சிறு குழந்தை ஒன்றை தூக்கி செல்வதை கண்டுள்ளனர்.

அந்தக் குழந்தை வெங்கண்ணாவின் குழந்தை ஆக இருக்கலாம் என அவர்கள் தெரிவித்தனர்.    அங்கிருந்த சிசிடிவி காமிரா பதிவை ஆய்வு செய்ததில் உமா தன் குழந்தையை ஏரிப்பகுதிக்கு எடுத்துச் சென்றது கண்டறியப்பட்டது.   காவல்துறையினர் உமாவிடம் விசாரணை நடத்திய போது அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

குழந்தை பால் குடிக்கும் போது தனக்கு மார்பகத்தில் கடும் வலி வருவதாகவும் அதை கணவரிடம் தெரிவித்த போது இது குறித்து அவர் கண்டுக் கொள்ளவில்லை எனவும் உமா தெரிவித்துள்ளார்.   அதனால் உமா தனது குழந்தையை ஏரியில் வீசி கொலை செய்ததையும் உமா ஒபுக்கொண்டுள்ளார்.   அதை ஒட்டி உமாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.