Random image

கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட பெண் கோயிலுக்குள் எரிப்பு

ராஜ்புரா, உத்திரப் பிரதேசம்

ரு குழந்தைகளுக்கு தாயான ஒரு பெண் ஐந்து பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கோயிலுக்குள் இழுத்துச் சென்று உயிருடன் எரிக்கப்பட்டுள்ளார்.

உத்திரப் பிரதேச மாநிலம் ராஜ்புரா பகுதியில் ஒரு 35 வயதுப் பெண் தனது இரு குழந்தைகளுடன்  வசித்து வந்தார்.  இவருடைய கணவர் காஜியாபாத் நகரில் தினக் கூலியாக பணி புரிந்து வருகிறார்.    நேற்று நள்ளிரவு சுமார் 2.30 மணி அளவில் இவரது வீட்டுக்குள் ஐந்து பேர் புகுந்துள்ளனர்.   தனியாக இருந்த அந்தப் பெண்ணை ஐந்து பேரும் மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளனர்.

அப்போது கடும் மழை பெய்துக் கொண்டிருந்ததால் அவருடைய கதறல் வெளியில் யாருக்கும் கேட்கவில்லை.  அதற்குப் பிறகு அவர் நடந்த விவரங்களை மொபைல் மூலம் தனது ஒன்று விட்ட சகோதரருக்கு தெரிவித்துள்ளார்.   அதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் அவரை அருகில் உள்ள கோயிலுக்குள் இழுந்துச் சென்றுள்ளனர்.

நள்ளிரவு நேரம்  என்பதால் கோவிலில் யாரும் இருக்கவில்லை.   அவரை அங்கிருந்த யாகசாலைக்குள் இழுத்துச் சென்ற ஐவரும் அவரை உயிருடன் எரித்துக் கொன்றுள்ளனர்.   அப்போதும் அந்தப் பெண் காவல்நிலைய அவசர உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டுள்ளார்.   ஆனால் அவருடைய அழைப்பை எடுத்து யாரும் பேசவில்லை,

ராஜ்புரா காவல்நிலையம் இது குறித்து அந்த ஐந்து பேர் மீது கூட்டு பலாத்காரம்,   கொலை, சாட்சிகளை அழித்தல்,  ஆயுதங்களைக் காட்டி மிரட்டுதல் உள்ளிட்ட பல குற்றச் சாட்டுக்களை பதிந்துள்ளனர். இந்த நிகழ்வுக்குப் பின் தலைமறைவாகி விட்ட இந்த ஐவரையும் காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது.

இந்த குற்றம் செய்த அரம் சிங்,  மகாவீர், சரண்சிங், குல்லு மற்றும் குமார்பால் ஆகியோர் மீது ஏற்கனவே இந்தப் பெண்ணிடம் பாலியல் சீண்டல் செய்ததாக புகார் நிலுவையில் உள்ளது.