திருச்சி:

ணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு வரும் நிலையில், குழந்தையை மீட்க துணியிலான பை ஒன்றை கண்ணீருடன் தைத்துக்கொடுத்துள்ளார், அந்த குழந்தையின் தாய்…. இந்த சம்பவம் அங்கு இருந்த மக்களிடையே கண்ணீரை வரவழைத்துள்ளது.

தனது வீட்டின் அருகே உள்ள நிலத்தில் 4 ஆண்டுகளுக்கு முன் தோண்டப்பட்டு, ஆள்துளை கிணறு சரியாக மூடப்படாமல் இருந்தநிலையில், அந்த பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த அவர்களது 2வயது குழந்தை  சுஜீத் வில்சன் அந்த குழாய்க்குள் விழுந்தான். அவனது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த தாய், குழந்தையை மீட்க முயற்சி செய்தார். முடியாத நிலையில், அக்கம்பக்கத்தினரும் திரண்டு வந்து மீட்க முயற்சி செய்தனர்.

இதைத்தொடர்ந்து காவல்துறையினர், தீயணைப்பு துறையினர், தன்னார்வலர் குழுக்கள் என பல தரப்பினரும் முயன்றும் அந்த குழந்தையை மீட்க முடியாமல் தவித்து வருகின்றனர். குழிக்குள் விழுந்த குழந்தைக்கு  ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது.

சம்பவ இடத்தில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, திருச்சி கலெக்டர்  ஆகியோர் முகாமிட்டு மீட்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். தற்போது, சென்னையில் இருந்து சென்ற பேரிடம் மீட்புக் குழு நவீன கருவிகளை கொண்டு மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

27 அடியில் இருந்த சிறுவன் 70 அடி ஆழத்திற்கு சென்றுள்ளதால் ஆழ்துளை கிணற்றில் சிறுவன் சுர்ஜித் முகம் , கைகள் மண்மூடி நிலையில் அசைவின்றி ஆழ் துளை கிணற்றில் உள்ளார். இந்நிலையில் இடுக்கிப்போன்ற கருவியைக் கொண்டு சிறுவனை மீட்க போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் குழந்தையை அலேக்காக தூக்க உறைபோன்ற ஒரு பை தேவைப்படுகிறது என மீட்புக்குழுவினர் கோரினர். அந்தப் பைக்காக அங்கும் இங்கும் தேடி அலைந்தனர். இதையறிந்த சுஜித்தின் தாய்,  பைதானே வேண்டும்…நானே தைத்து தருகிறேன் என்று களமிறங்கி,  உடனே வீட்டிற்குள் சென்று, அவர்கள் கேட்ட அளவிலான பையை கண்ணீருடன் தைத்து வழங்கினார். இந்த பரபரப்பா சூழ்நிலையிலும்,  சுமார்  20 நிமிடங்கள் நிதானமாக அமர்ந்து கண்ணீருடன்  பை தைத்து கொடுத்தார்.  இதைக்கொண்டு குழந்தையை மீட்டெடுக்கும் முயற்சிகள் தொடர்ந்து வருகிறது.

சுஜீத்தின் தாய், குழந்தையை மீட்க கண்ணீருடன் பை தைத்த நிகழ்வு அங்கிருந்தோரிடம் கண்ணீரை வரவழைத்தது.