மோட்டார் வாகன சட்டத் திருத்தம் ஊழலின் திறவு கோல் : ஆர்வலர் கருத்து

டில்லி

மோட்டார் வாகன சட்டத் திருத்தம் ஊழலுக்கு ஒரு திறவு கோலாக அமையும் என ஆர்வலர் கருத்து தெரிவித்துள்ளார்

கடந்த திங்கள் அன்று மக்களவையில் மோட்டார் வாகனச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.   அதன் பிறகு மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட அந்த மசோதா அங்கும் நிறைவேறியது.  இந்த மசோதாவில் பல போக்குவரத்து குற்றங்களுக்கு ஏராளமான அபராதம் மற்றும் சிறைத் தண்டனை மட்டுமின்றி ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படவும் வழி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து போக்குவரத்து ஆர்வலர் ரோகித் பகுஜ  மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு கடிதம் ஒன்றை எழுதி  உள்ளார்.   அந்த கடிதத்தில், “இந்த மசோதாவை நிர்வாகம் மற்றும் சட்டப்பூர்வமாகத் திருத்தம் செய்யாவிடில் அது குழப்பம், ஊழல் மற்றும்  பொதுமக்கள் கொடுமைக்கு வழி வகுக்கும் திறவு கோலாக அமையும்.

அதன்பிறகு அனைத்து வாகன ஓட்டிகளும் காவல்துறைக்கு ஒரு ஏடிஎம் போல ஆகி விடுவார்கள்.  இனி போக்குவரத்து விதிமீறலில் பிடிபடுபவர்களை இந்த அபராதத்தைக் காட்டி மிரட்டி அதிகாரிகள் லஞ்சம் பெற இந்த மசோதா வழி வகுக்கும்.    இந்த சட்டம் போக்குவரத்து சீர் கெடாமல் உதவி செய்யும் என அரசு கூறுவதைப் போல் இந்த மசோதா பல புதிய ஊழல் குற்றங்களை உருவாக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி