சென்னை:

போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்கள் ஓட்டி செல்பவர்களின் வீடுகளுக்கு, போக்குவரத்து காவல்துறையில் இருந்து அவர்களின் வீடுகளுக்கு  நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் போக்குவரத்து விதிகள் கடுமையாக அமல்படுத்தப்பபட்டு வருகிறது. சென்னை உயர்நீதி மன்றத்தின் தொடர் உத்தரவை அடுத்து, ஹெல்மெட் அணியாதவர்கள், சீட் பெல்ட் போடாதவர்கள், சிக்னலை மீறி வாகனத்தை ஓட்டி செல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

விதிகளை மீறுபவர்களை உடனே தடுத்து நிறுத்தி போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்து, எச்சரித்து அனுப்புகின்றனர். இந்த நிலையில், போக்குவிதிகளை மீறி செல்லும் வாகனங்களை, அந்த பகுதியில் உள்ள காமிரா உதவியுடன் கண்டறிந்து, வாகனத்தின் பதிவு எண்ணின் வாயிலாக அவர்களின் வீடுகளுக்கு புகைப்படத்துடன் கூடிய நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது.

அந்த நோட்டீசில் வண்டி எண், விதிமீறிய இடம், செல்லான் நம்பர் உடன் எவ்வளவு அபராம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அபராத்தை உடனே செலுத்தும்படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

கேமரா மூலம் வாகன எண் எடுத்து அவரவர் வீட்டிற்கே கட்டண இரசீது அனுப்பி வரும் காவல்துறையினரின் நடவடிக்கை வாகன ஓட்டிகளிடையே எச்சரிக்கையை ஏற்படுத்தி உள்ளது.