Random image

சீனா – மியான்மர் இடையே பொருளாதார பாதைக்கு ஒப்பந்தம்

பீஜிங்

சீனா மற்றும் மியான்மர் இடையே  பொருளாதார பாதை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டுள்ளது.

மியானமர் நாடு தற்போது மிகுந்த பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளது.   இதனால் உள் நாட்டில் மட்டுமின்றி உலக அளவிலும் அந்நாட்டுக்கு நெருக்கடி தொடர்கிறது.   அந்த நெருக்கடியில் இருந்து மீண்டு வர அயல்நாடான சீனாவின் உதவியை மியான்மர் நாடியது.   அதை ஒட்டி சீனா – மியான்மர் பொருளாதார பாதை அமைக்க இருநாடுகளும் திட்டமிட்டன.

சீனா தேசிய முன்னேற்ற மற்றும் சீரமைப்பு ஆணையத்தின் அறிவிப்பின் படி இந்த பொருளாதாரப் பாதையை பீஜிங் சாலை அமைப்பு கழகம் நிறுவ உள்ளது.   இது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த வாரம் இரு நாடுகளிக்கிடையே உருவாக்கப்பட்டுள்ளது.    இந்தப் பாதை சீனாவின் முக்கிய வர்த்தக நகரமான குன்மிங் முதல் மியான்மரின் அனைத்து வர்த்தக மையங்களையும் இணைக்கும் 1700 கிமீ தூரமுள்ள பாதை ஆகும்.

இந்த பாதைக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு, கட்டுமானம், உற்பத்தி, ஆகிய அனைத்து இனங்களும் இரு நாடுகளும் அளிக்க ஒப்புக் கொண்டுள்ளன.   முதலில் மியான்மரின் மண்டாலே பகுதி வரை அமைக்கப்படும் இந்த பாதை அதன் பிறகு கியாவ்கிப்யு வரை நீட்டிக்கப்பட உள்ளது.