பலிவாங்கும் எவரெஸ்ட்!

வரெஸ்ட் சிகரம் ஏறும் முயற்சியில் காணாமல் போன 4 வீரர்களின் உடல்கள்  கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

உலகின் உயரமான சிகரமான எவரெஸ்டில் ஏறி சாதனை படைக்க பலர் விரும்புவர். இதன் காரணமாக ஏராளமான வெளிநாட்டினரும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த மாதம்  எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முயன்ற நேபாள நாட்டை சேர்ந்த 2 பேர் உள்பட 4 பேர் பனிப்புயலில் சிக்கி  காணாமல் போயினர்.

இவர்களை தேடும் பணி நடைபெற்று வந்தது. தற்போது அந்த நான்கு பேரின் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

எவரெஸ்ட் மலையின் 8,000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பகுதியில் முகாமிட்டு தங்கிய 4 வீரர்களும், மூச்சுதிணறல் காரணமாக உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ரவிகுமார் என்பவர் எவரெஸ்ட் மலை ஏறி சாதனைப் படைத்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக  திரும்பும் வழியில் உயிரிழந்தார்.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முயன்ற 10 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.