கொரோனா விழிப்புணர்வில் நம்பிக்கை ஒளியேற்றும் ஸ்விஸ் மலை…

பெர்ன்

     சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற மாட்டர்ஹார்ன் மலையின் மின்னொளியில்,  மாலை நேரத்தில் கொரோனாவுக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் நம்பிக்கை ஊட்டுகின்றன.

    சுவிட்சர்லாந்தில் 1200பேரிடம் கொரோனாத் தொற்று  கண்டறியப்பட்டுள்ள நிலையில் இதுவரை 200 கற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்த எண்ணிக்கை ஏறக்குறைய பிரான்சை ஒத்துள்ளது.

  இந்நிலையில் மாட்டர்ஹார்ன் மலை உச்சியில் STAY HOME, HOPE உள்ளிட்ட வாசகங்கள்   மின்னொளியில் பிரகாசித்து நம்பிக்கையூட்டுகிறது.

  பொதுவெளியில் மக்கள் கூடுவதற்கு சுவிஸ் அரசு தடை விதித்துள்ளது.  ஜெனிவா மோட்டார் ஷோ, பேசில் வாட்ச் ஃபேர் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது…