மாண்டிநீக்ரோ

ரோப்பாவில் கொரோனாவால் மரணம் அடைந்த பேராயருக்கு மக்கள் கூடி துக்க முத்தம் அளித்தது அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.

கிறித்துவ வழக்கப்படி மரணம் அடைந்தோரின் கைகளில் அல்லது நெற்றியில் முத்தம் கொடுப்பார்கள்.   இது துக்கத்தைத் தெரிவிக்கும் ஒரு வகை அல்லது இறுதி மரியாதையில் ஒரு அங்கம் எனக் கூறப்படுகிறது.  மத குருமார்கள், பேராயர்கள் ஆகியோர் மரணம் அடைந்தால் அந்த தேவாலயத்தைச் சேர்ந்த அனைவரும் திரண்டு வந்து இந்த மரியாதையைச் செய்வது வழக்கமாகும்.

ஐரோப்பாவில் மாண்டிநீக்ரோவை சேர்ந்த செர்பியன் ஆர்தடாக்ஸ் தேவாலயத்தில் பேராயராக அம்ஃபிலோகிஜே ரடோவிக் இருந்தார்.  அவர் கொரோனா தாக்குதலால் மரணம் அடைந்தார்.  அவரது இறுதிச் சடங்கு நேற்று செர்பியன் ஆர்தடாக்ஸ் தேவாலயத்தில் நடந்தது.

அந்நகர மருத்துவமனையின் தலைமை மருத்துவர் நாவென்கா பவ்லிசிக் என்பவர் திறந்த முறையில் உடலை வைத்து இறுதி மரியாதை செலுத்துவதைத் தடை செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.  மேலும் இதனால் கொரோனா பரவும் என்பதால் சவப்பெட்டியை மூடி இறுதிச் சடங்குகள் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

ஆனால் பலரும் பேராயரின் உடல் அருகே முகக் கவசம் அணியாமலும் சமூக இடைவெளியைப் பின்பற்றாமலும் கூட்டமாக கூடி உள்ளனர்.  மேலும் அனைவரும் தங்கள் வழக்கப்படி பேராயரின் கைகள் மற்றும் நெற்றியில் முத்தமிட்டுள்ளனர்.  இந்த தகவல் உள்ளூர் செய்தித் தாள்களில் வெளியானதால் ஐரொப்பா கண்டம் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.