சட்டப்பேரவையில் தமிழக ராணுவ வீரர்கள் மறைவுக்கு இரங்கல்!

சென்னை,

மிழக சட்டசபையில் இன்று தமிழக ராணுவ வீரர்கள் இரண்டு பேர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு  ராணுவ வீரர்களுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு கண்ணந்தங்குடியைச் சேர்ந்த இளவரசனும், மதுரையைச் சேர்ந்த சுந்தர் பாண்டியும் காஷ்மீர் மாநிலம் குரேஷ் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி பரிதாபமாக  உயிரிழந்தனர்.

அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் அறிவித்து தமிழக முதல்வர் ஓபிஎஸ் உத்தர விட்டுள்ளார்.

இந்நிலையில், ராணுவ வீரர்கள் இளவரசன், சுந்தரபாண்டி ஆகியோர் மறைவுக்கு தமிழக சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று இரண்டு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.

கார்ட்டூன் கேலரி