நடமாடும் ‘ரேசன் கடைகள்’: 21ந்தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் எடப்பாடி…

சென்னை: தமிழகத்தில் வரும் 21ம் தேதி 3,501 நடமாடும் நியாய விலைக் கடைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தில்  9.66 கோடி ரூபாய் மதிப்பில் மொத்தம் 3,501 நடமாடும் ரேஷன் கடைகள் அமைக்கப் பட இருப்பதாக தமிழகஅரசு கடந்த மாதம் அரசாணை வெளியிட்டது. இந்த நிலையில், அதற்கான தொடக்க விழா 21ந்தேதி (திங்கட்கிழமை) நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் ரூ.9.66 கோடியில் 3,501 நடமாடும் அம்மா ரேசன் கடைகளை திறக்கப்படும் என அறிவித்துள்ள தமிழகஅரசு  இதன் மூலம்  சுமார் 5.36 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவர் என்று தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், வரும் 21ந்தேதி நடமாடும் ரேசன் கடைகளை திறக்கப்படும் என்றும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.