சீனாவை பின்னுக்குத் தள்ளிய ‘மேட் இன் பங்களாதேஷ்’ : ஆச்சரியத்தை ஏற்படுத்தும் பொருளாதார வளர்ச்சி

டாக்கா:

மேட் இன் சைனா என்பது எல்லாம் பழைய கதை. மேட் இன் பங்களாதேஷ் என்பது தான் புதிய அத்தியாயமாக தொடங்கியிருக்கிறது.


பங்களாதேஷில் குறைந்த சம்பளத்துக்கு தொழிலாளர்கள் கிடைப்பதால், சீன நிறுவனங்கள் தங்கள் வர்த்தக நிறுவனங்களை இங்கு தொடங்க ஆரம்பித்துள்ளனர்.

இதன் மூலம் பங்களாதேஷின் பொருளாதார வளர்ச்சி இந்த 8% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு சீன தொழிலதிபர் லியோ ஜுவாங்க் லிஃபெங் பங்களாதேஷில் காலடி எடுத்து வைத்த போது, டாக்கா விமான நிலையம் 2 கன்வேயர் பெல்ட்டுகளுடன் இயங்கியது. மின் விளக்குகள் கூட சரியாக இயங்கவில்லை.

சீனா மற்றும் மற்ற நாடுகளிலிருந்து தொழிலதிபர்கள் பங்களாதேஷுக்கு வந்த பிறகு, விமான நிலையமும் மேம்படுத்தப்பட்டு விட்டது.

குறைந்த சம்பளத்தில் ஏராளமான தொழிலாளர்கள் கிடைப்பதால், ஆடையக தொழிற்சாலையை பங்களாதேஷில் ஜுவாங்க் ஆரம்பித்தார்.
தற்போது இவரது நிறுவனத்தில் 20 ஆயிரம் பேர் பணியாற்றுகிறார்கள்.

தற்போது சீனாவை விட அனைத்து கட்டமைப்புகளையும் பங்களதேஷ் மேம்படுத்தியுள்ளது.

ஜுவாங்கின் நிறுவனம் தனி கிராமத்தையே உருவாக்கியிருக்கிறது. தொழிலாளர்களுக்கு மருத்துவ வசதி, தொழிலாளர்களின் குழந்தைகளை பராமரிக்க இல்லம் போன்றவற்றை இந்த நிறுவனம் செய்துள்ளது.

ஜுவாங் போல சீனா மற்றும் வெளிநாடுகளிலிருந்து பல நிறுவனங்கள் பங்களாதேஷில் தொடங்கப்பட்டுள்ளன.

இதனால் பங்களாதேஷில் அன்னிய முதலீடு அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 35 லட்சம் பேர் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்கான ஆடையக தயாரிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆடைகளில் ‘மேட் இன் பங்களாதேஷ்’ என்று நிறைய வர தொடங்கியுள்ளது.

22 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவிலிருந்து 30 நிறுவனங்கள் தான் தொடங்கப்பட்டன. தற்போது 400-க்கும் மேற்பட்ட சீன மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் பங்களாதேஷில் செயல்பட்டு வருகின்றன.

1971-&ம் ஆண்டுக்குப் பின் பாகிஸ்தானிலிருந்து பிரிந்து வந்த இளம் தெற்காசிய நாடான பங்களாதேஷின் வளர்ச்சி சீனாவை பின்னுக்குத் தள்ளும் அளவுக்கு வளர்ந்துள்ளது.

உலக அளவில் பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் பங்களாதேஷும் ஒன்றாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இது பல நாடுகளை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பங்களாதேஷ் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முகமது ஷாரியார் அலாம் கூறும்போது, “கடனை சரியாக கையாளுவதால் எங்கள் நாட்டின் பொருளாதாரம் வலுவாக இருக்கிறது “என்று தெரிவித்துள்ளார்.

 

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: economic growth, பங்களாதேஷ்
-=-