மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ராஜசேகர், I.C.U-வுக்கு மாற்றம்….!

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான ராஜசேகர் மற்றும் அவரது குடும்பத்தினருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது அவரின் உடல்நிலை பற்றி மருத்துவமனையில் இருந்து அறிக்கை வெளியாகியுள்ளது.

அதில் கூறியதாவது, ”கொரோனா வைரஸ் தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜசேகர், தற்போது செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவரின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், மருத்துவர்களின் கண்கானிப்பில் அவர் வைக்கப்பட்டிருப்பதாகவும்” அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.