ம. பி. சட்டசபை தேர்தல் : காங்கிரசின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

போபால்

த்தியப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

இந்த மாதம் 28 ஆம் தேதி மத்தியப் பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 11 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் அன்றைய தின்மே அறிவிக்கபட உள்ளன.

தற்போது மாநிலத்தை ஆண்டு வரும் பாஜகவும் எதிர்க்கட்சியான காங்கிரசும் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றன.   இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தனது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் 165 பேர் இடம் பெற்றுள்ளனர். மாநிலத்தின் முக்கிய தலைவர்கள் பலர் இடம் பெற்றுள்ள இந்த பட்டியல் காங்கிரசார் பலருக்கு திருப்தியை அளித்துள்ளது.

இந்த வேட்பாளர் பட்டியலில் முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் கின் மக ஜயவர்தன் சிங் பெர்யர் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published.